HONOR Magic V3, HONOR MagicPad 2 மற்றும் HONOR MagicBook Art 14 ஆகியவை செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் IFA 2024 இல் உலக அளவில் விற்பனைக்கு வரும்

HONOR Magic V3, HONOR MagicPad 2 மற்றும் HONOR MagicBook Art 14 ஆகியவை செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் IFA 2024 இல் உலக அளவில் விற்பனைக்கு வரும்

“AI unfold your magic (செயற்கை நுண்ணறிவு – உங்களுக்கான மாயத்தை திறக்கலாம்)” என்ற கருப்பொருளுடன், அடுத்த மாதம் பெர்லினில் நடைபெற உள்ள IFA 2024 நிகழ்வில் பங்கேற்பதாக HONOR அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் ஹானர் மேஜிக் வி3, ஹானர் மேஜிக்பேட் 2 மற்றும் ஹானர் மேஜிக்புக் ஆர்ட் 14 (HONOR Magic V3, HONOR MagicPad 2, HONOR MagicBook Art 14 ) ஆகிய மாடல்களை கடந்த மாதம் சீனாவில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வில் அவற்றை உலகளாவிய சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்.

image 25 Thavvam

ஹானர் மேஜிக் V3

அதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னரே, HONOR மேஜிக் V3 இன் மெலிதான வடிவமைப்பை சிறப்பம்சமாக முன்னிலைப்படுத்தியது, இது 226 கிராம் எடையும், மடிக்கும்போது 9.2 மிமீ தடிமனும் கொண்டது, கிடைக்கக்கூடியதில் இதுவே மிகவும் மெல்லிய உள்நோக்கி மடிக்கக்கூடிய தொலைபேசியாகும்.

image 26 Thavvam

சாதனத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

மேம்பட்ட பேட்டரி தொழில்நுட்பம்: மூன்றாம் தலைமுறை சிலிக்கான்-கார்பன் பேட்டரி, 10% வரை சிலிக்கான் கொண்டது, செயல்திறன் சமரசம் செய்யாமல் மிகவும் சிறிய உருவ அளவை வழங்குகிறது.

சூப்பர் ஃபைபர் மெட்டீரியல்: பின் அட்டையானது 5800MPa வலிமை கொண்ட ஃபைபர் பொருளால் ஆனது, இது கெவ்லர் (Kevlar) மற்றும் கார்பன் ஃபைபரை விட வலிமையானது மற்றும் இலகுவானது.

சூப்பர் ஸ்டீல் கீல் மடக்கு: இரண்டாம் தலைமுறை சூப்பர் ஸ்டீல் கீல் மடக்கு, 2100MPa இழுவிசை வலிமை கொண்டது வெறும் 2.84 மிமீ தடிமன், கட்டமைப்பு வலுவூட்டலுக்கு கூடுதல் இடத்தை வழங்குகிறது.

டைட்டானியம் நீராவி அறை குளிரூட்டல்(vapor chamber cooling): டைட்டானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த நீராவி அறை, 0.22 மிமீ அலைபேசிகளில் மிக மெல்லியதாக உள்ளது, வெப்பச் சிதறலை 22% அதிகரிக்கிறது, எடையை 40% குறைக்கிறது மற்றும் முந்தைய ரகத்தை விட செயல்திறனை 53% அதிகரிக்கிறது.

கின்னஸ் உலக சாதனை முயற்சி

HONOR நிறுவனம் கின்னஸ் உலக சாதனையாளரான பிரையன் பெர்க்குடன் ஒத்துழைப்பு, அவர் பசை இல்லாமல் 8 மணி நேரத்திற்குள் அட்டைகளை அடுக்கி மிக உயரமான கட்டமைப்பை உருவாக்க முயற்சிப்பார். இலகுரக ஹானர் மேஜிக் V3, 226 கிராம், அதன் குறைந்தபட்ச எடையை நிரூபிக்க கட்டமைப்பின் மேல் உச்சியில் வைக்கப்படும்.

இந்த நிகழ்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாலை 15:00 CEST மணிக்கு (பிஎம் 6:30 IST) HONOR Global இன் YouTube மற்றும் X தள பக்கங்களில் ஒளிபரப்பப்படும்.

ஹானர் ஐஎஃப்ஏ 2024 வெளியீட்டு நிகழ்வு செப்டம்பர் 5, 2024 அன்று 14:00 CESTக்கு (5:30 PM IST), ஹால் 6.2B, இன்ஸ்பிரேஷன் ஸ்டேஜில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Editor Thavvam Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழால் இணைவோம்

Follow us on social media