முன்னாள் இந்திய பிரதமரான ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுதலை செய்யப் பெற்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தன் அவர்களின் பூதஉடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இலங்கையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு வருகிறது.
கிளிநொச்சியில் ஏராளமான மக்கள் ஒன்றுதிரண்டு கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.கிளிநொச்சி நகர டீப்போ சந்தியில் கறுப்புகொடிகள் கட்டப்பட்டு பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு மஞ்சள் நிற கொடிகள் பறக்கவிடப்பட்டு மக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என்று ஏராளமானோர் பங்கேற்று உணர்வுப்பூர்வ அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply