நடிகர் விஜய் அண்மையில் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் அமைப்பின் கட்சிக் கொடியை அனுமதி பெறாமல் ஏற்றியதாக அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய்யின் த.வெ.க
நடிகர் விஜய் தனது ரசிகர்கள் அமைப்பாக இருந்த மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக சமீபத்தில் மாற்றினார்.
இவ்வாறு கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களையும் இணைக்க மும்முரமாக வேலைகள் நடந்து வருகின்றன.
கட்சியின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி.ஆனந்த் கட்சியின் நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார்.
அரசியல் கட்சி
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து தமிழக வெற்றிக் கழகம் பணியாற்றிக் கொண்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனுமதியில்லாமல் கட்சிக்கொடியை ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழகத்தினரின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் தலைமையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உளுந்தூர்பேட்டை அருகில் எலவனாசூர் கோட்டை பகுதியில் புத்தமங்கலம் மற்றும் நெடுமானூர் மட்டிகை ஆகிய ஊர்களில் நேற்று(19.02.24) கொடியேற்றும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்கு காவல்துறையினரிடம் உரிய அனுமதியை பெறவில்லை என கூறப்படுகிறது. மேலும், கட்சிக்கொடியை ஏற்றிய தமிழக வெற்றிக் கழகத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சிக் கொடியும் அவ்விடத்தில் அகற்றப்பட்டுள்ளது.
அத்தோடு, அனுமதியின்றி கட்சிக் கொடியை ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus
Leave a Reply