இந்திய தேர்தல் ஆணையம் வரப்போகும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவானது வரும் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் விவசாயி சின்னம் தொடர்பான சிக்கலில் சிக்கியிருந்தது.
கரும்பு விவசாயி சின்னம்
இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம்தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு, கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா என்ற கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து பெற்றுக் கொண்ட காரணத்தால் நாம் தமிழர் கட்சி பயன்படுத்திய சின்னத்தை இழக்க நேரிட்டது.
இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மாற்றாக வேறொரு சின்னத்தை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தியது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருந்த போதும் நாம் தமிழர் கட்சி வேறு சின்னத்தை கேட்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply