நாசா(NASA)வின் பெர்செவரன்ஸ் ரோவர், செவ்வாய் உலகத்தை இப்போது புதிய பரிணாமத்தில் ஆராய்ந்து வருகிறது.
அது மதிப்புமிக்க பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரிப்பதோடு வளிமண்டல தரவுகளையும் சேகரித்து வரவுள்ளது.
செவ்வாயின் தரையிலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை டைட்டானியம் குழாய்களில் சேகரித்துக்கொண்டுள்ளது. அவ்வாறு குழாய்களில் பாறை கற்கள் நிரப்பப்படும் போது அதனிடையே இடைவெளி உருவாவதால் அங்கே காற்று நிரப்புவதற்கு ஏதுவாகிறது.
இவ்வாறாக செவ்வாய்க் கோளின் காற்று மாதிரிகளை, 24 டைட்டானியம் குழாய்களில் சேகரித்து நிரப்பி மூடியுள்ளது.
குழாய்களின் “ஹெட்ஸ்பேஸ்” பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ள காற்று பல புதிய நுண்ணறிவுகளை மனித இனத்துக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, விஞ்ஞானிகளுக்கு செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தையும் அதன் பழங்கால நுண்ணுயிர் வாழ்வு பற்றி அறியும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு ஆய்வு செய்ய ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
மேலும் படங்களுடன் விரிவாக நாசாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் படிக்க: https://www.nasa.gov/missions/mars-2020-perseverance/perseverance-rover/why-scientists-are-intrigued-by-air-in-nasas-mars-sample-tubes/
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply