கிளிநொச்சி தர்மபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகருடைய பிரிவில் விடுதலைப்புலிகள் புதைத்த தங்கத்தை தேடி நிலத்தை தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் தங்கம் எதுவும் கிடைக்காததால் அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
றெட்பானான சந்திக்கு அருகே உள்ள நிலத்தில் அரவை ஆலை அமைந்துள்ள கட்டிடத்துக்குள்ளும், அந்த குறிப்பிட்ட நிலத்துக்குள்ளும் விடுதலைப்புலிகளுடைய தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டாவது நாளாக இன்றும்(20/02/24) அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.குறித்த இடத்தில் ஏற்கனவே சிலர் சட்டவிரோதமாக தங்கம் தோண்ட முயன்று தர்மபுரம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் அந்த இடத்தில் விடுதலைப்புலிகள் பரல் கணக்கில் தங்கத்தினை புதைத்து வைத்துள்ளதாக நம்பத்தகுத்த தகவல் கிடைத்த நிலையில் தர்மபுரம் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு அங்கே தோண்டும் நடவடிக்கைகள் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
இருந்தபோதிலும், தங்கம் எதுவும் அங்கே கிடைக்காத நிலையில் அகழ்ந்த இடங்களை மூடிவிட பணிக்கப்பட்டுள்ளது.குறித்தபடி தோண்டும் நடவடிக்கைக்காக நிலத்தை சுற்றிலும் பெருமளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus
Leave a Reply