60 வயதில் பிரபஞ்சஅழகி போட்டிக்கு தகுதி; அர்ஜெண்டினா பெண் அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ் சாதனை

image 19 Thavvam

60 வயது பெண்மணி ஒருவர் பிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ் – miss universe) போட்டிக்கான அர்ஜெண்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் மாகாண அளவிலான தேர்வு போட்டியில் வெற்றி பெற்று, வயது மற்றும் அழக, பற்றிய சமூக வரையறைகளை கடந்து வரலாறு படைத்துள்ளார்.

மே 2024 இல் திட்டமிடப்பட்டுள்ள பிரபஞ்ச அழகி போட்டிக்கான அர்ஜென்டினாவுக்கான தேசியத் தேர்வில் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்த அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ் என்ற இந்த பெண்மணி தயாராகியுள்ளார்.

பிரபஞ்ச அழகி Alejandra Marisa Rodríguez, coronada Miss Universo Buenos Aires, Argentina
Alejandra Marisa Rodríguez, coronada Miss Universo Buenos Aires. / Credits: EL DÍA

(Alejandra Marisa Rodríguez, 60)இவர் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டாவைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். அவர் மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ் 2024 பட்டத்தை வென்றுள்ளார். அவரது வெற்றி, வயது மற்றும் அழகு பற்றிய மக்களின் கருத்துக்களை உடைத்து, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையின்படி, ரோட்ரிகஸின் வெற்றி ஒரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது, அவர் தனது வயதில் அத்தகைய மதிப்புமிக்க அழகுப் போட்டியை வென்ற முதல் பெண்மணி ஆனார். அவரது கதிர்வீச்சு போன்ற புன்னகையும், அழகான பங்கேற்பு நடத்தையும் நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை ஒருசேரக் கவர்ந்தது.

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட காணொளிகளின்படி, இந்த வெற்றியின் மூலம், மே 2024 இல் திட்டமிடப்பட்டுள்ள மிஸ் யுனிவர்ஸ் அர்ஜென்டினாவுக்கான (Miss Universe Argentina) தேசியத் தேர்வில் ரோட்ரிக்ஸ் அவர்கள் பியூனஸ் அயர்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார். அதிலும் அவர் வெற்றி பெற்றால்,செப்டம்பர் 28, 2024 அன்று மெக்சிகோவில் நடைபெற உள்ள உலக அளவிலான பிரபஞ்ச அழகி (Miss Universe World) போட்டியில் பங்கேற்க அர்ஜென்டினாவின் கொடியை பெருமையுடன் ஏந்திச் செல்வார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் : https://www.instagram.com/alejandramarisa.rodriguez?igsh=MzNhb2pjczdybGVq

ரோட்ரிகஸின் இந்த பயணம் அழகுக்கான வழக்கமான பொதுமக்களின் கருத்துருக்களை மாற்றுகிறது மற்றும் சமூக விதிமுறைகளை தாண்டியதாக அமைகிறது, நம்பிக்கை, மீண்டும் ஒருவர் சோதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *