பௌத்த பிக்குகளின் பேரரசியலை தடுக்கும் வரையில் மோதல்கள் தொடரும்! எச்சரிக்கும் சர்வதேசம்

image 13 Thavvam

சூழல் சீர்படுத்தப்படாதவரை தொடர்ந்து வெடுக்குநாறிமலை விவகாரத்தைப் போன்ற மோதல்கள் அரங்கேறும் என்று சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவிற்கான இலங்கை ஆய்வாளர் ஆலன் கீனன் எச்சரித்துள்ளார்.

Alan keenan

வவுனியா மாவட்டத்தில் வெடுக்குநாறிமலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் (08.03.24) சிவராத்திரி தின பூஜை வழிபாடுகளுக்காக அங்கு சென்ற பக்தர்களுக்கு காவல்துறையால் இடையூறுகள் விளைவிக்கப் பட்டதுடன் இரவுவேளையில் வழிபாடுகளைத் தொடர முயன்றோர் அங்கே இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

அதுமட்டுமின்றி ஆலயப் பூசகர் உள்ளிட்ட எட்டுப் பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இதன் அடிப்படையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சூழலில் நேற்று(19.03.24) அவர்கள் அனைவருமே விடுவிக்கப்பட்டதோடு அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

இவ்வாறாக இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது வரவேற்கத் தக்க செய்தி என்று ஆலன் கீனன் தெரிவித்துள்ளார்.இருந்த போதிலும் சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு ‘கொழும்பு அரசாங்கம்’ வலியுறுத்தும் வரையில், நாட்டினுடைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பகுதிகளில் நிலங்கள் அபகரிப்பதையும், அதோடு இன மற்றும் மத பரவலை மாற்றி அமைப்பதையும் இலக்காகக் கொண்டு ராணுவத்தினரின் ஒத்துழைப்போடு இயங்கிவரும் (சிறிய அளவிலான) புத்த பிக்குகளின் அரசியல் அபிலாஷைகளைத் தடுக்கும் வரையில், இவ்வாறான மோதல்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *