மத்திய சுகாதார அமைச்சகம் @MoHFW_INDIA இந்தியாவில் பாம்புக்கடி மூலம் மக்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கும், பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கும் தேசிய செயல்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை
2030ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகளை பாதியாகக் குறைக்கும் முயற்சியாக, ‘#ஒன் ஹெல்த் (#one health)’ அணுகுமுறை மூலம்பாம்புக்கடி குறித்த சிறு புத்தகம், பொது சமூகத்திற்கான “செய்ய வேண்டியவை” மற்றும் “செய்யக்கூடாதவை” பற்றிய சுவரொட்டிகள் மற்றும் பாம்புக்கடி விழிப்புணர்வு குறித்த 7 நிமிட காணொளி உட்பட IEC கருத்துக்கள் வெளியிடப்பட்டது.
பாம்புக்கடி சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்கும் முக்கிய ஆதாரமான பாம்புக்கடி உதவி மையம் ஐந்து மாநிலங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படும்.தேசிய ரேபிஸ் கட்டுப்பாட்டு திட்ட இணையதளமும் தொடங்கப்பட்டதுநாட்டில் விலங்குகள் மூலம் பரவும் நோய்களின் கண்காணிப்பை வலுப்படுத்த ஒருங்கிணைந்த சுகாதார முன்முயற்சியாக இந்த தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய ஒரு சுகாதார திட்டமாக இது அமையும்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply