1 ஏக்கரின் (Acres Width) அகலம் = 1 சங்கிலி / 4 கம்பங்கள்/ 22 கெஜம்
நிலவளவை குழிக்கணக்கு வருமாறு
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி (Pit)
100 குழி (Pit)= 1 மா
240 குழி (Pit) = 1 பாடகம்
Conversion Units (கன்வெர்ஷன்)
1 சதுர அங்குலம் (Sq. Inches) = 6.4516 சதுர செண்டிமீட்டர் (Sq. Centimeter)
1 சதுர அடி (Sq. Ft) = 0.09290304 சதுர மீட்டர் (Sq. Meter )
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர் (Sq. Meter )
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்
Other Land Units (பிற அலகுகள்)
1 ஏர் = 100 சதுர மீட்டர் (Sq. Meter )
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் (Sq. Meter ) = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் (Hectare) இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது. நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் (Acres) ஆகும்.
1 ஏக்கர் (Acres) = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி (Sq. Ft) = 4046.8564224 சதுர மீட்டர் (Sq. Meter)
1 சதுர மைல் (Sq. Mile) = 640 ஏக்கர் (Acres) = 2.5899881103 சதுர கிலோ மீட்டர் (Sq. Km)
Land Measurement (நில அளவை)
100 ச.மீ (Sq. Meter) – 1 ஏர்ஸ்
100 ஏர்ஸ் – 1 ஹெக்டேர் (Hectare)
1 ச.மீ (Sq. Meter)- 10 .764 ச அடி (Sq. Ft)
2400 ச.அடி (Sq. Ft) – 1 மனை (Flat)
24 மனை (Flat)- 1 காணி (Land)
1 காணி (Land)- 1 .32 ஏக்கர் (Acres)
144 ச.அங்குலம் (Sq. Inches) – 1 சதுர அடி (Sq. Ft)
435 . 6 சதுர அடி (Sq.Ft) – 1 சென்ட் (Cent)
1000 ச லிங்க்ஸ் – 1 சென்ட் (Cent)
100 சென்ட் (Cent) – 1 ஏக்கர் (Acres)
1 லட்சம் ச.லிங்க்ஸ் – 1 ஏக்கர் (Acres)
2 .47 ஏக்கர் (Acres)- 1 ஹெக்டேர்
1 ஹெக்டேர் (Hectare) = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் (Acres) )
1 ஏக்கர் (Acres) = 4840 குழி (Square Yard)
100 சென்ட் (Cent)= 4840 சதுர குழிகள் (Sq. Pit)
1 சென்ட் (Cent)= 48.4 சதுர குழிகள் (Sq. Pit)
1 ஏக்கர் (Acres) = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter)
1 ஏக்கர் (Acres) = 43560 சதுர அடி (Sq. Ft)
பட்டா(Patta):
ஒரு குறிப்பிட்ட நிலத்தின் உரிமையை காட்டும் வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட ஆவணம்.
சிட்டா(Sitta):
ஒரு குறிப்பிட்ட நிலத்தின் இருப்பிடம், நோக்கம் மற்றும் உரிமை உள்ளிட்டவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஆவணம்.
அடங்கல்:
வருவாய்த் துறையின் ஆவணம், நிலத்தின் அளவு, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் முழு கிராமத்தின் சதவீதத்தையும் பற்றிய தகவல்களை வழங்குகிறது.