கப்பல் கொள்கலன் ஒன்றின் ஊடே மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இருவர் சீனாவில் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் இன்று (24/02/24) அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கப்பலில் இருந்த கொள்கலனில் மறைந்து மலேசியா நாட்டிற்குற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
ஏற்க மறுத்த மலேசியா
அவர்களில் ஒருவர் மலர்மதி ராஜேந்திரன்(26 வயது) என்றும், மற்றொருவர் ஜெயக்குமார் தருமராசா(39 வயது) என்றும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் இருவரும் கடந்த ஆண்டில் ஜனவரி 30ஆம் தேதி மலேசியா செல்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘மெர்க்ஸ் யூனிகார்ன்’ என்ற கப்பலில் ஏற்றப்பட்ட காலி கொள்கலனுக்குள் ரகசியமாக நுழைந்துள்ளனர்.
அதன்படி அந்த கப்பல் மலேசியாவை அடைந்தபோது, கொள்கலனில் மறைந்திருந்த இரு சந்தேக நபர்களையும் மலேசியாவானது ஏற்றுக்கொள்ள மறுத்ததால், கப்பல் அதிகாரிகள் அந்த சந்தேக நபர்களை ஏற்றிக்கொண்டு பயணத்தின் வழியே பல நாடுகள் கடந்து இறுதியாக சீனாவை அடைந்துள்ளனர்.
சீனாவில் கைது
இதனையடுத்து சீன அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
அந்த சந்தேக நபர்கள் இருவரையும் சீனாவில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று காலை 5 மணியளவில், சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவ்விமானம் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பிறகு, கட்டுநாயக்க விமானநிலைய குற்றப் புலனாய்வுத்துறை, வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழு ஒன்றும் அவர்களை கைது செய்து கொழும்பில் கிருலப்பன பகுதியில் உள்ள முதன்மை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply