மனு பாக்கர், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்
ஒலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார். 22 வயதான மனு பாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் 221.7 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார்.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுவாகும். டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் பாக்கர் 12வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply