இஸ்ரேலின் ட்ரோன்களை ஈரான் சுட்டு வீழ்த்தியதால் பதற்றம் அதிகரிப்பு

இஸ்ரேலின் ட்ரோன்களை ஈரான்  சுட்டு வீழ்த்தியதால் பதற்றம் அதிகரிப்பு

ஈரான் நாட்டின் (Iran) இஸ்பஹான்(Isfahan) பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதல்களால் மத்தியகிழக்கு பிராந்தியத்தில் பதற்றநிலை அதிகரித்துள்ளது.

Drones
Example image

ஈரான் நாட்டின் இஸ்பஹான் (Isfahan) நகரத்தின் வடகிழக்கு பகுதியில் ஈரானிய இராணுவ விமானத் தளத்திற்கு அருகில் மூன்று ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Army soldier gunshots
Example image

இத்தாக்குதல் சம்பவம் பற்றி ஈரானிய தளபதி செய்தி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, தங்கள் இராணுவ விமானத் தளத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஈரானிய தளபதி தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாக்குதல், ஈரானியர்களைத் தூண்டிவிடுமா இல்லையா? என்று அவரிடம் வினா எழுப்பப்பட்டபோது, “ஈரானின் பதிலை ஏற்கனவே நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்” என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், “இஸ்ரேலுடைய ஆணு ஆயுத நிலைகள் மேல் ஈரானானது கடும் தாக்குதல்களை மேற்கொள்ளும்” என்று ஈரானுடைய (Islamic Revolutionary Guard Corps) படைப்பிரிவின் முதன்மை இராணுவத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் அஹமத் ஹக்தலா (Brigadier General Ahmad Haghtala) நேற்று கடுமையாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Editor Thavvam Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழால் இணைவோம்

Follow us on social media