ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் இந்தியாவின் பக்கம் ஈர்த்துள்ள அயோத்தி ஸ்ரீராமர் கோவில் ஜனவரி 22, 2024 ஆகிய இன்று திறக்கப்பட உள்ளது. பாரத பிரதமர் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் 8000பேர் பங்கேற்கின்றனர்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி(Reliance), கௌதம் அதானி(Adani), ரத்தன் டாடா(Tata) , அஜிம் பிரேம்ஜி(wipro), NR நாராயணமூர்த்தி(Infosys) உட்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களும் கோவிலுக்கு பெருமளவில் நன்கொடைகள் வழங்கியுள்ளார்.
நண்பகல் 12:00 மணி தொடங்கி 12:45க்குள் பிராண பிரதிஷ்டை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகிறது
பாதுகாப்பு பணியில் சுமார் 30,000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர், 10,000 சிசிடிவி படக்கருவிகளும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சரயு நதிக்கரையில் கோவில் அமைந்துள்ளதால், நீர்நிலையில் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு நீச்சல் வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Leave a Reply