111 வயதான ஜான் ஆல்ஃபிரட் டினிஸ்வுட், டைட்டானிக் கப்பல் மூழ்கிய சில மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 26, 1912 இல் லிவர்பூலில் பிறந்தார்.
உலகின் மிக வயதான ஆண் என்ற பெயருக்கு சொந்தக்காரராகியுள்ள இவர், தனது நீண்ட ஆயுளின் ரகசியம் என்பது அதிர்ஷ்டம், நிதானம் – மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறுகிறார்.
முந்தைய சாதனையாளர்களான, வெனிசுலாவின் ஜுவான் விசென்டே பெரெஸ் இந்த மாதம் 114 வயதில் இறந்ததைத் தொடர்ந்து, அடுத்ததாக நீண்ட காலம் வாழ்ந்த ஜப்பானைச் சேர்ந்த கிசாபுரோ சோனோப் மார்ச் 31 அன்று 112 இல் இறந்தார். அதனால் தற்போது 111 வயதான இங்கிலாந்துக்காரர் ஜான் ஆல்ஃபிரட் டினிஸ்வுட், கின்னஸ் உலக சாதனை நிறுவனம் மூலம் தற்போது இந்த பட்டத்தை புதியதாக வைத்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
வடமேற்கு இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் அவர் வசிக்கும் பராமரிப்பு இல்லத்தில் வியாழக்கிழமை கின்னஸ் உலக சாதனைகளால் டினிஸ்வுட்டுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய சில மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 26, 1912 இல் லிவர்பூலில் பிறந்த டின்னிஸ்வுட், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ஆர்மி பே கார்ப்ஸில் (pay corps) பணியாற்றி இரண்டு உலகப் போர்களைச் சந்தித்தார்.
ஓய்வு பெற்ற கணக்காளரும் கொள்ளுத்தாத்தாவுமான இவர் மிதமான வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியம் எவை என்று கூறினார். அவர் ஒருபோதும் புகைபிடிப்பதில்லை, அரிதாகவே மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் மற்றும் வாரத்திற்கு ஒரு முறை மீன் மற்றும் சிப்ஸ் அடங்கிய இரவு உணவைத் தவிர, வேறு எந்த சிறப்பு உணவையும் பின்பற்றுவதில்லை.
“நீங்கள் அதிகமாக குடித்தால் அல்லது அதிகமாக சாப்பிட்டால் அல்லது அதிகமாக நடந்தால் – நீங்கள் எதையும் அதிகமாக செய்தால் – நீங்கள் இறுதியில் கஷ்டப்படுவீர்கள்” என்று டின்னிஸ்வுட் கின்னஸ் உலக சாதனையிடம் கூறினார்.
ஆனால் இறுதியில், அவர் கூறினார், “இது தூய அதிர்ஷ்டம். நீங்கள் நீண்ட காலம் வாழ்கிறீர்களோ அல்லது குறுகிய காலம் வாழ்கிறீர்களோ, ஆனால் அதற்காக உங்களால் அதிகம் எதுவும் செய்ய முடியாது.”
ஸ்பெயினின் 117 வயதான மரியா பிரான்யாஸ் மோரேரா, உலகின் மிக வயதான பெண்மணி மற்றும் மிகவும் வயதானவர் என்ற பெயரை கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply