இலங்கையில், வரும் மே மாதம் சீன விளையாட்டு வீரர்களுக்காக மாபெரும் மாரத்தான் ஓட்டப் பந்தயம் ஒன்று நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க ஏறத்தாழ 3000 சீன விளையாட்டு வீரர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக, இலங்கை சுற்றுலா மற்றும் உணவக முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நிகழ்வுகள்
மாரத்தான் ஓட்டம்
அதன்படி இவ்வாண்டு மே மாதம் 1 முதல் 3ம் தேதி வரை இந்த ஓட்டப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடல் உணவு திருவிழா
இதனைத் தொடர்ந்து உனவட்டுனா கடற்கரைப் பகுதியில் கடல் உணவு திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியக தலைவர் சாலக கஜபாஹு இதனை வருடாந்திர நிகழ்வாக மாற்றுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.இத்திட்டத்தினால் இலங்கைக்கு ரூ.225 பில்லியன் அளவுக்கு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus
Leave a Reply