கனடா நாட்டில் இவ்வாண்டில் கடும் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாக சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப்பருவ காலத்தில் காட்டுத்தீயானது ஆபத்தானதாக அமையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர ஆயத்த அமைச்சரான ஹார்ஜிட் சஜ்ஜான் இது தொடர்பான முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளார்.மாகாண அரசுகளின் அவசர ஆயத்த அமைச்சர்களுக்கும் மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தந்த மாகாண அரசுகள் காட்டுத்தீயை கட்டுப்படுத்துதல் குறித்த சகல வளங்களையும் பயன்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு காட்டுத்தீயானது பரவி அதனால் பெருமளவிலான அழிவுகளை அந்நாட்டின் சில மாகாணங்கள் எதிர்நோக்கியிருந்தன.
கியூபெக், அல்பேர்ட்டா போன்ற சில மாகாணங்களில் கடுமையான காட்டுத்தீ பரவல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதுபோல எந்த சம்பவமும் நடக்காமல் இருக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply