இந்தியமயமாக்கலுக்கு இலங்கை ஆளாக கூடாது: கடும் எதிர்ப்பை வெளியிட்ட சரத்வீரசேகர

FB IMG 1708626751230 Thavvam

இலங்கையில் பயன்படுத்தப்படும் இந்திய ரூபாய்க்கு எதிராகவும், இந்தியாவின் முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் விமான நிலையங்களை வழங்குவதற்கும் தம்முடைய கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், இலங்கையை ஒருபோதும் இந்தியமயமாக்கக் கூடாது என்று அரசின் அவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

FB IMG 1708626751230 Thavvam

நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டு எடுப்பதற்கு அதிபர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியது எனவும், இலங்கையானது படிப்படியாக இந்தியமயமாக்கலுக்கு ஆளாக்கப்படுமானால் அதற்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 இந்தியாவின் 29வது மாநிலமாக

 “இலங்கையில் இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதையும் அல்லது இலங்கையானது இந்தியாவின் 29வது மாநிலம்போல் மாறுவதையும் நாங்கள் எதிர்க்கிறோம்.இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம் என்ற போதும், இந்தியாவின் முதலீட்டாளர்களுக்கு விமான நிலையங்களை வழங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம்.

விமான நிலையம் என்பது நாம் நாட்டிற்குள் நுழையக்கூடிய உணர்வுப்பூர்வமான இடமாகும். ஒரு நாட்டின் விமான நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் கைப்பற்றுவது அந்நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும்,” என்றார்.

எட்கா ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பம் இடக் கூடாது

இந்தியா உடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் (ETCA) இலங்கை கையொப்பம் இடக் கூடாது என்று கூறிய அவர், இதன் வழியாக இந்தியர்கள் இலங்கையிலும் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

“இலங்கை இந்தியாவுடன் ETCA ஒப்பந்தத்தில் கையொப்பிடப் போகிறது எனில் நாங்கள் அதை எதிர்க்கிறோம். இதன் மூலமாக இந்தியர்கள் இங்கே இலங்கைக்குள் வேலை வாய்ப்புக்காக நுழைய முடியும்.

இந்தியாவில் தற்போது 44 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பு இல்லாது உள்ளனர். தோராயமாக 2,00,000 மருத்துவர்கள் இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். சுமார் 1.5 மில்லியன் மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் பொறியாளர்களாக தேர்ச்சி பெறுகிறார்கள், 25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளில் 42% பேர் வேலையில்லாமல் உள்ளனர். இந்த சூழலில் இந்தியர்களை இலங்கையில் வேலைதேட அனுமதிப்பது இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலான விடயமாக அமையும்,” என்றார்.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *