அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை பற்றி தெரிவித்த கருத்தானது தெரியாமல் கூறிய ஒன்றாகும் என்று “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன” கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ். பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.
மேலும், அவருடைய கருத்துக்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாமெனவும் எஸ். பி. திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.இலங்கையானது தனது வரலாற்றில் இருந்து இந்தியாவின் படையெடுப்புகளுக்கு எதிராகப் போராடும் ஒரு நாடு என்பதினால் இலங்கை என்பது ஒருபோதும் இந்தியாவின் மாநிலம் அல்ல எனத் தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க, இந்தியா உடனான நட்புறவின் காரணமாக இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி உறுப்பினரும் அல்ல
மேலும், ஹரின் பெர்னாண்டோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் அல்ல. அவர் ஒரு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் எனவும், அவரது அறிக்கைகளை பொதுஜன பெரமுன கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.கடந்த காலங்களில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கி பூஜ்ஜியமாக வீழ்ந்திருந்ததாகவும் தற்போது அது மீண்டும் அதிகரித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க கூறிள்ளார்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus
Leave a Reply