சவுதி அரேபியா அரசு அந்நாட்டின் தலைநகரான ரியாத்தில் முதல் மதுக்கடையை திறக்க திட்டமிட்டு இருப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
இசுலாமியர் அல்லாத வெளிநாட்டு தூதர்கள் இக்கடைகள் மூலம் மதுவைப் பெற இயலும். இப்புதிய திட்டத்தின் மூலம் மதுவைப் பெறுவதற்கு, வெளிநாட்டு தூதர்கள் இதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதிக் குறியீட்டைப் பெற்று, அலைபேசி செயலியின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
விஷன் 2030:
எண்ணெய் வளத்தை கடந்து, சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் “விஷன் 2030” என்ற திட்டத்தை அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் செயல்படுத்தி வருகிறார்.
Image Credits: Al Arabia
அதில் ஒரு பகுதியாக அந்நாட்டை சுற்றுலா மற்றும் வணிக மையமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மதச்சார்பற்ற சுற்றுலா, இசை நிகழ்ச்சிகள், திரையரங்குகள், பெண்கள் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது இத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இன்னும் உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தையும் சவுதி அமைத்து வருகிறது, இது மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமையப்பெறும்.
Leave a Reply