நாகார்ஜுனா ஆசிர்வாதத்துடன் காலை 9.42 மணிக்கு நாக சைதன்யா, சோபிதா துலிபாலா தம்பதி மோதிரம் மாற்றிக்கொண்டனர், இதை மணமகனின் தந்தை நாகார்ஜுனா ட்விட்டரில் அறிவித்தார்.
பிரபல நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்:
இந்த ஜோடி இன்றைய நிச்சயதார்த்த விழாவில் இருந்து தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது, நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா சமூக ஊடகங்களில் இதனை படங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார், “எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9:42 மணியளவில் நடந்த நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். !! அவரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள்! அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்! 8.8.8 எல்லையற்ற அன்பின் ஆரம்பம்.” என்று பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் வீட்டில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. நிச்சயதார்த்த விழாவில் நாகார்ஜுனாவின் மனைவி அமலா அக்கினேனி மற்றும் சைதன்யாவின் சகோதரர் அகில் ஆகியோர் துலிபாலாவின் பெற்றோருடன் கலந்து கொண்டதாக சைதன்யாவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் நாகார்ஜுனா மற்றும் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த வீடு தெலுங்கு திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு அடையாளமாக உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், நாகாவின் ‘இரண்டாம் திருமணம்’ பற்றிய வதந்திகள் ஆன்லைனில் வெளிவந்தன. தற்போது தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவர் இதற்கு முன்பு சமந்தா ரூத் பிரபுவை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் 2021 இல் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply