iQOO Z9 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை, வெளியீட்டு சலுகைகள், விற்பனை தேதி, விவரக்குறிப்புகள் மற்றும் பிற விவரங்கள்

image 6 Thavvam

iQOO Z9 5G அலைபேசியானது இந்தியாவில் ₹20,000 விலைக்குள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200 chipset), 120 ஹெர்ட்ஸ் திரை (120Hz display), 5,000எம்ஏஎச் மின்கலம் (5000mAh battery), 50 மெகாபிக்சல் இரட்டை ரியர் கேமரா (50-megapixel dual rear camera) அமைப்பு மற்றும் பல புதிய இடைப்பட்ட 5ஜி போனின் முக்கிய சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது. iQOO Z9 5G அடிப்படை ரகத்துக்கு(base model) இந்தியாவில் ₹19,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான விற்பனை தேதி, அறிமுக சலுகைகள், விவரக்குறிப்புகள் மற்றும் பிற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

iqoo-z9-5g-launched-in-india-details

iQOO Z9 5G: விலை, வெளியீட்டு விற்பனை சலுகைகள்

இந்தியாவில்iQOO Z9 5G இரண்டு கட்டமைப்புகளில் விற்பனைக்கு வரும். 8 ஜிபி + 128 ஜிபி நினைவக (storage) மாடலின் விலை ₹19,999, அதே சமயம் 8 ஜிபி + 256 ஜிபி ரகத்தின் விலை ₹21,999 ஆக இருக்கும். அந்நிறுவனத்தின் iQOO இந்தியா (iQOO india website) வலைத்தளம் மற்றும் Amazon இணையதளம் வழியாக இந்தியாவில் இப்புதிய 5G அலைபேசி வாங்குவதற்கு கிடைக்கும்.

அமேசான் பிரைம் உறுப்பினராக (Amazon Prime membership) உள்ளவர்கள், மார்ச் 13 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு ஆரம்ப அணுகல் விற்பனையில் இச்சாதனத்தை வாங்க முடியும். பிரைம் அல்லாத உறுப்பினர்களுக்கு, விற்பனை மார்ச் 14 அன்று துவங்கும். வெளியீட்டு விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, அங்கு ஐசிஐசிஐ (icici bank) மற்றும் எச்டிஎஃப்சி(hdfc) வங்கி கார்டுகளுக்கு ₹2,000 தள்ளுபடி கிடைக்கும். இதன் வழியாக அடிப்படை ரக அலைபேசி ₹17,999 விலைக்கு கிடைக்கும்.

iQOO Z9 5G: விவரக்குறிப்புகள், அம்சங்கள்

iQOO Z9 5G ஆனது octa-core MediaTek Dimensity 7200 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த கைப்பேசியானது சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 OS இல் இயங்குகிறது. இது 6.67-இன்ச் FHD+ AMOLED 120Hz டிஸ்ப்ளே, 300Hz வரையிலான தொடு மாதிரி வீதம் (touch sampling rate) மற்றும் 91.90 சதவிகித சாதனத்திற்கும் திரைக்குமான (screen-to-body ratio) விகிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பேனலில் டிடி-ஸ்டார் 2 பிளஸ் கிளாஸ் (DT-Star 2 Plus) பாதுகாப்பும் உள்ளது.

இச்சாதனம் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் முதன்மை சோனி IMX882 சென்சார் கொண்டுள்ளது. இதனுடன் 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. கேமரா பயன்பாட்டில் நைட் மோட், சூப்பர்மூன், புரோ, லைவ் புகைப்படம் மற்றும் பல போன்ற புகைப்பட அம்சங்கள் உள்ளன. செல்ஃபிக்களுக்காக, நிறுவனம் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் ஒன்றை இணைத்துள்ளது.iQOO Z9 ஆனது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த அலைபேசியுடன் கூடிய மின்னேற்றியும் (charger) இந்த பெட்டியில் சேர பெறுவீர்கள். இச்சாதனம் IP54-மதிப்பிடப்பட்டது, அதாவது இது ஸ்பிளாஸ்-எதிர்ப்பு கொண்டது. இது இரட்டை ஸ்டீரியோ ஒலிபெருக்கிகளையும் கொண்டுள்ளது. பிரஷ்டு பச்சை (Brushed Green) மற்றும் கிராபென் நீலம் (Graphene blue) ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *