பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு கிடைத்துள்ள ரொக்கப் பரிசுகள் !

image 13 Thavvam

இந்தியா தற்போது நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் 2024 பங்கேற்ப்பை ஆறு பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

2020ம் ஆண்டில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா ஏழு பதக்கங்களை வென்றது; அதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் ஆகியவை அடங்கும். டோக்கியோ 2020 இந்தியாவின் மிக வெற்றிகரமான ஒலிம்பிக் பங்கேற்பாகும். அதனுடன் ஒப்பிடுகையில் இந்த முறை ஒரு பதக்கம் குறைவே.

பாரிஸ் 2024 இல், மனு பாக்கர் (Manu bhaker) துப்பாக்கி சுடுவதில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றார்; அதில் ஒற்றையர் பிரிவில் ஒன்றும், மற்றொன்று சரப்ஜோத் சிங்குடன் கலப்பு இரட்டையர் பிரிவிலும் பெற்றதாகும்.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், பாரிஸ் ஒலிம்பிக் 2024
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்.(படம்: Doordarshan Sports- X)

இதற்கிடையில், ஸ்வப்னில் குசலேவும் துப்பாக்கி சுடுதல் வெண்கலத்துடன் நிறைவு செய்தார். ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளியும், ஆடவர் ஹாக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலமும் வென்றனர். அமன் செஹ்ராவத்துக்கும் மல்யுத்த போட்டியில் வெண்கலம் கிடைத்தது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு கூட்டு வெள்ளிப் பதக்கத்திற்கு மேல்முறையீடு செய்த வினேஷ் போகட்க்கு சாதகமாக CAS தீர்ப்பு வரும் பட்சத்தில், டோக்கியோ 2020 இல் பெற்ற பதக்கங்களை இந்தியா சமன் செய்யும்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் இந்தியாவிற்காக பதக்கம் வென்றவர்கள் இதுவரை பெற்ற ரொக்கப் பரிசுகள் விவரம்:

மனு பாக்கர்: 22 வயதான அவருக்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரால் ₹30 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியாவின் கொடியை ஏந்தியவராகவும் இருந்தார்.

ஆண்கள் ஹாக்கி அணி: ஆண்கள் ஹாக்கி அணியில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ₹15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது, இது ஹாக்கி இந்தியாவால் அறிவிக்கப்பட்டது. மேலும், support staffகளுக்கு தலா ₹7.5 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கிடையில், ஒடிசா முதல்வர் மோகன் மஞ்சி, டிஃபண்டர் அமித் ரோஹிதாஸுக்கு ₹4 கோடியும், ஒவ்வொரு வீரருக்கும் ₹15 லட்சமும், ஒவ்வொரு support staffகளுக்கும் ₹10 லட்சமும் பரிசு அறிவித்தார். மறுபுறம், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மாநிலத்தைச் சேர்ந்த ஒவ்வொரு அணி உறுப்பினருக்கும் ₹1 கோடி ரொக்கப் பரிசு அறிவித்தார்.

சரப்ஜோத் சிங்: மனு பேக்கருடன் இணைந்து துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சரப்ஜோத், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ரொக்க விருது திட்டத்தின் மூலம் ₹22.5 லட்சம் காசோலையை திரு மாண்டவியா வழங்கினார்.

நீரஜ் சோப்ரா: நீரஜ் சோப்ரா தொடர்பான ரொக்கப் பரிசுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. டோக்கியோவில் தங்கம் வென்றபோது, ​​ஹரியானா அரசிடம் இருந்து ₹6 கோடி பெற்றார்.

ஸ்வப்னில் குசலே: ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிப் போட்டியில் குசலே வெண்கலம் வென்றார், மேலும் ₹1 கோடி பரிசை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

அமன் செஹ்ராவத்: வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ரொக்கப் பரிசையும் பெறுவார், ஆனால் அதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *