லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி சார்பில் தோனி (MS Dhoni) மைதானத்திற்குள் நுழைந்த போது ரசிகர்கள் ஆரவாரம் விண்ணை முட்டியது. இதனால் தனது ஆப்பிள் வாட்சில் ‘செவித்திறன் குறைபாடு’ எச்சரிக்கை காட்டப்பட்டுள்ள படத்தை டி காக்கின் மனைவி பகிர்ந்துள்ளார்.
எல்எஸ்ஜி(LSG- Lucknow Super Giants) அணியின் விக்கெட் கீப்பர்-ஓப்பனர் குயின்டன் டி காக்கின் (Quinton de kock) மனைவி சாஷா, லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் பேட்டிங் செய்ய முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி மைதானத்திற்குள் வந்தபோது,
அவரது ஆப்பிள் வாட்ச் மிகை ஒலி எச்சரிக்கையுடன் காட்சியளிக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். “சத்தமான சூழல்… ஒலி அளவு 95 டெசிபல்களை எட்டியது. இந்த அளவில் வெறும் 10 நிமிடங்களுக்கு தற்காலிக காது கேளாமை ஏற்படும்” என்று எச்சரிக்கை கூறப்பட்டுள்ளது.
தோனி எல்எஸ்ஜிக்கு எதிராக 28*(9) ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் தோனி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசினார். அதில் 101 மீட்டர் உயரம் பறந்த ஒரு சிக்ஸரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.crictracker.com/cricket-live-feeds/ipl-2024-match-34-lsg-vs-csk-live-lsg-vs-csk-live-updates-commentary-news-and-more/
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்