YouTubeக்கு போட்டியாக எலான் மஸ்க்கின் புதிய X TV app

IMG 20240426 150746 Thavvam

X TV app: உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk), ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு புது அம்சங்களையும், மாற்றங்களையும் கொண்டுவந்தபடியே உள்ளார். குறிப்பிடும்படியாக இந்த தளத்திற்கு டிவிட்டர்(twitter) என்ற பெயரை எக்ஸ் என்று மாற்றி பெயரிட்டு பல புது அம்சங்களை சேர்த்துள்ளார்.

குறிப்பாக எக்ஸ் தளத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு வரும் ஒவ்வொரு அம்சமும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைகிறது.

Elon musk x logo twitter x TV app

இந்த சூழ்நிலையில் கூகுள் நிறுவனத்தின் யூட்யூப் தளத்திற்குப் போட்டியாக எலான் மஸ்க்கின் எக்ஸ் (x) வலைத்தள நிறுவனம் புதியதாக டிவியில்(TV)ல் பயன்படுத்தத்தக்க வகையில் செயலி(app)ஒன்றை உருவாக்கி வருகிறது. அதாவது ஸ்மார்ட் டிவிகளில் (smart TV) எப்படி யூடியூப் பயன்படுத்தி காணொளிகளை பார்க்க இயலுமோ, அதே போல ஸ்மார்ட் தொலைக்காட்சிகளில் இந்த எக்ஸ் டிவி செயலியை (X TV App) பார்க்க முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X TV app
X TV app

குறிப்பிடத்தக்க வகையில் இந்த எக்ஸ் டிவி செயலியானது யூடியூப்பை போன்ற வடிவமைப்பையே கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக யூடியூப் தளத்திற்கு போட்டியளிக்கும் வகையில், இந்த எக்ஸ் டிவி செயலியானது இருக்குமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எக்ஸ் வலைத்தளம் தற்போது உருவாக்கி வரும் பிரத்யேகமான இந்த டிவி செயலியானது “யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் இருக்கும்” என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரியான லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) உறுதிப்படுத்தியுள்ளார்.

Linda yaccarino
லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino)

மேலும் இதுபற்றி அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது யாதெனில், “சிறிய திரையிலிருந்து பெரிய திரை வரை உள்ள அனைத்திலும் இந்த எக்ஸ் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது”. வெகு விரைவில் நாங்கள் இந்த எக்ஸ் டிவி செயலி மூலம் உங்களது ஸ்மார்ட் டிவிகளில் உள்ளடக்கங்களை நிகழ்நேரத்தில் கொண்டு வருவோம்.

இந்த எக்ஸ் டிவி செயலி அளிக்கும் வசதிகளானது பெரிய திரையில் உயர்தரமான மற்றும் அதிவேகமான பொழுதுபோக்கு அனுபவத்தை பயனருக்கு வழங்கும். இதற்காகவே பிரத்யேகமாக இந்த எக்ஸ் டிவி செயலி வசதியை இன்னும் நிறைய மேம்படுத்தலுடன் உருவாக்கி வருகிறோம்.

ஒரு பயனர்கள் நீங்கள் எதிர்பார்க்ககும், தேவைப்படும் அனைத்து அம்சங்களும் இந்த எக்ஸ் டிவி செயலி வசதியில் கிடைக்குமென்றும் லிண்டா யாக்காரினோ மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவர் இதுகுறித்த காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவற்றோடு நில்லாமல் டிரெண்டிங் வீடியோ அல்காரிதம் (trending video algorithm), செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) , மேம்படுத்தப்பட்ட வீடியோ தேடல், வேகமாக கண்டறியும் வசதி, சுலபமான காஸ்டிங் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த எக்ஸ் டிவி செயலியில் கிடைக்கும் என்று குறிப்பிட்டு, இந்த செயலியின் வசதி குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள் எனவும், நாங்கள் இதை எக்ஸ் (x) பயனர்களுக்காக உருவாக்கி வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், முன்னரே வெளியாகியிருந்த தகவலின்படி, இந்த எக்ஸ் டிவி செயலியானது Fire OS (Amazon) மற்றும் Tizen OS (samsung) ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட் டிவிகளுக்கு முதலில் கிடைக்கும் என்றும் பின்னரே மற்ற அனைத்து இயங்குதளம் கொண்ட டிவிகளுக்கும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் தற்போது இந்த எக்ஸ் டிவி செயலியானது சோதனை கட்டத்தில் தான் உள்ளது. கூடியவிரைவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

அதுபோலவே எலான் மஸ்க் இந்த எக்ஸ் (twitter) தளத்தை வாங்கியதில் இருந்தே காணொளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இத்தளத்தில் ஷாட் வீடியோ(short video), வெர்டிக்கல் ஷாட் வீடியோ(vertical short video), கடைசியாக நெடுநேரம் கொண்ட வீடியோ (long duration video) எனப் பல்வேறு வீடியோ அம்சங்கள் இணைக்கப்பட்டது.

சமீபத்தில் கூட பிரபல யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் (Mr Beast) எக்ஸ் தளத்தில் தனது முதல் நீண்ட நேர காணொளியை பதிவிட்டார்.தற்போது இதில் போதுமான வருமானம் கிடைப்பதாக தெரிவித்த அவர் மேலும் இதுபோன்ற நீண்ட காணொளிகளை long format videos பதிவிடத் துவங்கியுள்ளார். இன்னும் எக்ஸ் தளத்தில் இன்ஸ்டாகிராம் போல ரீல்ஸ்(reels) , யூடியூப் போல (long format videos) இரண்டையும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எலான் மஸ்க்கின் திட்டமாகும்.

இதனை எல்லா நாடுகளுக்கும் அந்நிறுவனம் விரிவாக்கம் செய்துவரும் வேளையில் எக்ஸ் தளத்தில் தற்போது பயனர்கள் ஒவ்வொருவரும் செலவிடும் நேரம் அதிகரித்துள்ளது. இதனையொட்டி அடுத்தகட்டத்திற்குக் நகர்த்தி கொண்டு செல்லும் நோக்கில் நீண்ட நேர காணொளிகளை பெரிய திரையில் பார்க்க வேண்டி ஸ்மார்ட் டிவிகளுக்காக இந்த எக்ஸ் டிவி செயலி வெகுவிரைவில் கொண்டுவரப்படவுள்ளது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *