டெவின் AI (Devin AI) என்னும் பெயர் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான காக்னிஷனால்(Cognition) உருவாக்கப்பட்டுள்ளது, இதன் வகையில் இதுவே முதலாவதாகும்.
இது மென்பொருள் பொறியியலின்(software engineering) பரிணாமத்தில் அடுத்தகட்டத்தை எட்டப்போகும் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு மென்பொருளாகும்.
இந்த தொழில்நுட்பம், பயனர் அளிக்கும் எளிய கட்டளைகளை முழுமையாக செயல்படும் இணையதளங்களாகவும் (websites) அல்லது மென்பொருள் நிரல்களாக(software programs) உருவாக்கித்தரும் திறன் கொண்டது, இது codeகளை எழுதுதல் அதில் பிழைத்திருத்தம் செய்தல், மற்றும் வரிசையாக ஒழுங்குபடுத்துதல் செயல்முறைகளை மேற்கொள்கிறது.
இதன் திறன்கள்
டெவின் AI ஆனது SWE-பெஞ்ச் கோடிங் பெஞ்ச்மார்க்கில் (SWE-bench coding benchmark) கட்டமைக்கப்பட்டுள்ளது, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி அல்லது OpenAI இன் ChatGPT போன்ற பிற பெரிய மொழி மாதிரிகள் (LLM – large language models) போல இல்லாமல், டெவின் AI தேவைப்படும் மென்பொருள் codeகளை நிறைவு செய்து பரிந்துரைப்பது மட்டுமல்லாமல், அதன் உருவாக்கம் முதல் வெளியீடு வரை முழு மென்பொருள் மேம்பாட்டு வாழ்க்கைச் சுழற்சியையும் மொத்தமாக நிர்வகிக்கிறது.
டெவின் AI எவ்வாறு செயல்படுகிறது
அதன் சொந்த code எடிட்டர், கட்டளை வரி இடைமுகம் (command line interface) மற்றும் உஉலாவியுடன(browser) தன்னாட்சி முறையில் செயல்படும் டெவின் AI, ஒரு மனித மென்பொருள் பொறியாளரை போலவே செய்யும் பணிகளை பிரதிபலிக்கிறது. இது சிக்கலான திட்டங்களை பிரித்து நிர்வகிக்கக்கூடிய அளவில் சிறிய திட்டப்பணிகளாக மாற்றிக்கொண்டு செயல்படுகிறது, பொறியியல் திட்டங்களைத் திட்டமிடுகிறது மற்றும் அதன்படி செயல்படுத்துகிறது, மேலும் நிகழ்நேரத்தில் மனித பொறியாளர்களுடன் இதனால் ஒத்துழைத்து செயல்பட முடியும், அடுத்தடுத்த புதுப்பிப்புகள், தேவைப்படும் இடங்களில் கருத்துகளை வழங்குதல் மற்றும் வடிவமைப்பு தேர்வுகளுக்கு (design options) பங்களிக்கிறது.
செயலில் AI…
டெவின் AI இன் திறன்களைக் காண்பிக்கும் ஒரு செயல்விளக்கத்தை cognition நிறுவனம் வழங்கியது, பிழைகளை விரைவாகத் திருத்துவது, நிகழ்நேர முன்னேற்ற அறிக்கைகளை(real time progress reports) வழங்குவது மற்றும் பயனரின் கருத்துகளின் அடிப்படையில் வடிவமைப்புத் தேர்வுகளில் ஒத்துழைப்பது ஆகியவற்றை விளக்குகிறது. இந்த புதுமையான மென்பொருள் மென்பொருள் பொறியியல் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதாக அமைகிறது, இதன்மூலம் நிறுவனங்கள் தங்கள் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள் http error 500.30
Leave a Reply