47 வயதான ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி (Alexei Navalny) சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சியில் இருந்த ஊழலுக்கு எதிராக போராடிய அலெக்ஸி நாவல்னி , வெள்ளிக்கிழமை நடைபயிற்சியில் ஈடுபட்டபோது உடல்நலக்குறைவு அடைந்ததாகவும் மேலும் அவர் சுயநினைவை இழந்ததால் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் ரஷ்ய சிறைச்சாலை சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாவல்னியின் மரணச் செய்தி அதிபர் புட்டினுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதையடுத்து சிறைத்துறையானது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நாவல்னியின் மரணம் தற்போது பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
உயிரிழந்த நாவல்னியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி கிரா யர்மேஷ், X தளத்தில், நாவல்னியின் மரணத்தை அவரது அரசியல் குழு உறுதிப்படுத்தவில்லை என்று கூறினார். ஏற்கனவே நாவல்னிக்கு ரஷ்ய அரசாங்கம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பரில், நாவல்னி மத்திய ரஷ்யாவில் உள்ள சிறையிலிருந்து ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்.
விஷம்
ஏற்கனவே, 2020ம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாவல்னி மயங்கி விழுந்தார். அப்போது அவரது உடலில் விஷம் கலந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், உயிருக்கு ஆபத்தான சூழலில் அவர் ஜெர்மனி நாட்டில் 5 மாதங்கள் சிகிச்சை பெற்றார். பின்னர் ரஷ்யா திரும்பியபோது அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus
Leave a Reply