சாந்தன் நாடு திரும்ப இலங்கை அரசு அனுமதி

சாந்தன் நாடு திரும்ப இலங்கை அரசு அனுமதி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவரான சாந்தன் 32 வருட சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையாகி, நாடு திரும்புவதற்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மட்டும் சாந்தனுக்கு தற்காலிக கடவுச்சீட்டை வழங்கியுள்ளது. சாந்தன் (இயற்பெயர் சுதந்திர ராஜா) 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் 2022 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றிருந்த சாந்தனுக்கு சென்னையில் உள்ள இலங்கைக்கான துணைத்தூதரகம் தற்காலிக பயண ஆவணமாக கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

திருச்சியில் இருக்கும் சிறப்பு முகாமில் இருந்து தன்னை விடுவித்து இலங்கைக்கு அனுப்பக் கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது மாநில அரசு நீதிமன்றத்தில் இதனை அறிவித்தது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக் குற்றவாளிகளாக தண்டனை விதிக்கப்பெற்ற நளினி மற்றும் முருகன் ஆகியோர் தங்களை லண்டனில் உள்ள மகளிடம் செல்ல அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு நவம்பரில், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோரை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரி திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழக அரசானது, சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய சில நாட்களுக்குப் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும், தண்டனைக்கு உள்ளான பேரறிவாளனை உயர் நீதிமன்றம் ஏற்கனவே விடுதலை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சாந்தன்
பட ஆதாரம் : தமிழ்வின்

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus

Editor Thavvam Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழால் இணைவோம்

Follow us on social media