5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் சிக்கல்

5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் சிக்கல்

இலங்கையில் 5G தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்கு தேவையான உள் கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதால் அதனை அறிமுகம் செய்வதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக கூறப்படுகின்றது.

image 37 Thavvam

இதனால் எப்போது இலங்கையில் 5G தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என்பதை தெளிவுபடுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தேவையான உள் கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு பெருமளவில் செலவுகள் ஏற்படும் என்று தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ள போதிலும் அரசும், தொலைதொடர்பு நிறுவனங்களும் இச்சேவையை விரைந்து வழங்குவதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேவைப்படும் உட்கட்டுமான வசதிகளை நாடு முழுவதும் ஏற்படுத்துவதற்கு பெரிய அளவிலான முதலீடுகள் செய்ய வேண்டிவரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நடைமுறை சவால்களால் 5G சேவைக்கான கட்டணங்களும் அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான சூழல் உருவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் 5G தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட நாடாக இலங்கை விளங்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus

Editor Thavvam Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழால் இணைவோம்

Follow us on social media