54 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் புதிய அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதன்படி சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட்டு தரத்தை மேம்படுத்தும் வகையில் நீல நிற அட்டையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நீல நிற அட்டை காட்டப்படும்…
1970ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கால்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படப்போகும் அடுத்த புதிய அட்டை இதுவாகும் என கூறப்படுகிறது.
போட்டிகளில் வீரர்கள் தவறு செய்தாலோ அல்லது நடுவருடன் கருத்து வேறுபாட்டை மேற்கொண்டாலோ நீல அட்டையானது காட்டப்படும்.
இதன்படி 10 நிமிடங்களுக்கு குறிப்பிட்ட வீரர்கள் மைதானத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்
இதன்படி இரண்டு முறை நீலநிற அட்டையானது காட்டப்பட்டால் அந்த வீரர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்.
கீழ்மட்ட விளையாட்டு போட்டிகளில் மட்டுமே தற்போது நீல அட்டைச் சோதனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கவுள்ள சர்வதேச கால்பந்து சங்க வாரியத்தின் வருடாந்திர கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் ஃபிபா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus
Leave a Reply