சூரிய ஒளி ஆற்றல் பயன்பாடும், பராமரிப்பும்.

image 9 Thavvam

சூரிய ஒளி ஆற்றல் பற்றிய ஒரு சிறு பார்வை..

பொதுவாக சூரிய ஒளி மின்சாரமானது eco friendly என நாம் அறிந்ததே, மற்ற மின்சார உற்பத்திக்கும் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதற்கு பராமரிப்பு செலவு மிக குறைவு, மற்றும் இதனால் இயற்கைக்கும், சுற்றுச் சூழலுக்கும் எந்த தீங்கும் வருவதும் இல்லை, #சூரிய_ஆற்றல்சிலிகானை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட போட்டோ வோல்ட்டை செல்களின் மீது சூரிய ஒளி கதிர்கள் விழும்போது அது மின்சாரமாக மாற்றப்படுகிறது.இது பகலில் மட்டுமே வேலை செய்யும். மழைக்காலங்களில் சோலார் தகடுகள் இயங்குமா என்ற தயக்கம் வேண்டாம். காரணம் சூரிய ஒளியில் இருக்கும் போட்டான் கதிர்களை கிரகித்துதான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எனவே பகலில் மேகமூட்டமோ, மழையோ இருந்தாலும் சோலார் தகடுகள் போட்டானை கிரகித்து மின்சாரத்தை உற்பத்தி செய்து விடும்.இதில் இரண்டு வகைகள் உண்டு ஒன்று On Grid system மற்ற ஒன்றுOff Grid system.

சூரிய ஒளி ஆற்றல்

#On_Grid_System : சோலார் தகடுளிகள் இருந்து வரும் மின்சாரமானது நேர்திசை மின்சாரமாகும் (Direct Current DC), இந்த மின்சாரத்தை நாம் Inverter என்ற Electronic equipment க்கு கொடுத்து அதை நாம் நேர் திசை மின்சாரத்தில் இருந்து மாறுதிசை மின்சாரமாக ( Alternating Current AC) மாற்றி நமது தேவைகேற்றபடி சிங்கிள் பேஸ் ( Single Phase – 230 Volt ) அல்லது த்ரீ பேஸ் ( Three Phase 415 Volt) உபயோகித்து கொள்ளலாம்.இந்த வகை On Grid system என்பது பகல் நேரத்தில் மட்டுமே வேலை செய்யும், இதை பயன்படுத்தி நாம் நமது மின்சார தேவைகளை மிகவும் குறைத்து கொள்ள இயலும், நமது மின்சாரம் தடை பட்டால் இந்த வகை system வேலை செய்யாது. ஏன் என்றால் இதற்கு நமது EB யில் இருந்து Reference voltage தேவைப்படும் அந்த voltage தடை படும் போது இந்த வகை system வேலை செய்யாது. அதை நாம் Solar Anti-Islanding Protection என்று அழைப்போம். நமது load ( fan, AC, Lights, Computers, AC, Motor ) எல்லாவற்றிற்கும் இந்த வகை system support செய்ய கூடியது.#Load_Sharing மேலும் நமது load அளவு நாம் பொறுத்தி இருக்கும் சோலார் தகடுகளை விட அதிகமாக இருந்தால் இந்த on grid inverter நமது EB யில் தேவையான அளவு மின்சாரத்தை எடுத்து நமது load ற்கு அனுப்பி சரி செய்து கொள்ளும் (Load Sharing),

#Power_Export to Grid அதுவே நமது load அளவு, நாம் பொறுத்தி இருக்கும் சோலார் தகடுகளின் அளவை விட குறைவாக இருந்தால் இந்த on grid inverter ஆனது அந்த சூரிய ஒளியில் இருந்து வர கூடிய நம் தேவைக்கு அதிகமான மின்சாரத்தை அரசாங்கத்திற்கு அனுப்பி விடும் (Export ) அதற்கு Net meter என்ற உபகரணம் தேவைபடும், இந்த Net meter க்கு இன்னொரு பெயர் Bi – Directional Meter அதாவது இரண்டு பக்கமும் செல்ல கூடிய மின்சாரத்தை கணக்கில் வைத்து கொள்ள கூடிய மீட்டர், தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நாம் நமது EB யில் இருந்து எவ்வளவு மின்சாரம் உபயோகித்து (Import) இருக்கிறோம் என்பதையும், நாம் நமது சூரிய ஒளி தகடுகள் மூலம் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்து அரசாங்கத்திற்கு கொடுத்து (Export) இருக்கிறோம் என்பதையும் கணக்கில் வைத்து கொள்ளும்,நாம் அரசாங்கத்திற்கு உற்பத்தி செய்து கொடுத்த மின்சாரத்தை அரசாங்கம் நாம் உபயோகித்தEB மின்சாரத்தில் இருந்து கழித்து கொள்ளும், அதனால் இந்த வகை system மற்ற system த்தை விட பயனளிக்க கூடியது. மேலும் இந்த வகை system த்தில் பராமரிப்பு என்பது மிகவும் எளிதான ஒன்று. விலையும் குறைவு.

#Off_Grid_System :இந்த வகை system ஆனது சோலார் தகடுகளில் இருந்து வர கூடிய மின்சாரத்தை நேரிடையாக நமது லோடிற்கு அனுப்பி மீதி இருக்கும் மின்சாரத்தை மின் கலன்களில் (Battery) சேமிக்க கூடியது ஆகும், மின்சாரம் தடை படும் நேரங்களில்/ இரவு நேரங்களில் கூட இந்த வகை system ஆனது வேலை செய்யும், இந்த வகை system மூலமாக நாம் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்தாலும் அதை EB க்கு அனுப்ப முடியாது, உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் நாம் உபயோகிக்க வேண்டும் அல்லது பேட்டரில் சேமித்து கொள்ளலாம், மற்றும் இந்த வகை system load sharing option கிடையாது, அதனால் குறிப்பிட்ட அதாவது இன்வெர்டர் capacity என்னவோ அதில் இருந்து 85% Load மட்டுமே Connect செய்து உபயோகிக்க முடியும். இதற்கு மேல் நாம் load connect செய்தால் inverter trip ஆகவும், Inverter failure ஆகவும் வாய்ப்பு உண்டு, இந்த வகை சிஸ்டத்தில் heavy load connect செய்து உபயோகிக்க கூடாது அப்படி உபயோகித்தால் பேட்டரி சீக்கிரம் failure ஆக வாய்ப்புகள் அதிகம் இந்த வகை system ஆனது விலை அதிகம் பராமரிப்பும் அதிகம்,

#பராமரித்தல்__எப்படி :

1. 15 அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை நாம் தரை கழுவும் துடைப்பான்(Mop) வைத்து சாதாரண தண்ணீரில் முக்கி எடுத்து சோலார் தகடுகளை சுத்தம் செய்ய வேண்டும் எந்தவொரு இரசாயனமும் சேர்க்க தேவையில்லை. சோலார் தகடுகளை சுத்தம் செய்ய காலை 7 Am to 9 Am மற்றும் சாயங்காலம் 5 Pm to 7 Pm வரை ஏற்ற நேரமாகும், மதிய நேரத்தில் சுத்தம் செய்வது எற்றதல்ல ஏன் என்றால் வெயில் நேரத்தில் சூரிய ஒளி தகடானது அதிகபடியான சூடாக இருக்கும் அப்போது நாம் தண்ணீர் வைத்து சுத்தம் செய்தால் சூரிய ஒளியின் கண்ணாடியானது உடைய வாய்ப்பு அதிகம்.

2.மாதம் ஒரு முறை சூரிய ஒளி தகடுகளின் கீழ் உள்ள வயர்களை சரி பார்ப்பது நல்லது, எலி, பூனை, குரங்கு போன்ற உயிரினங்களாலால் வயர் பாதிப்பிற்குள்ளதா என பார்த்து கொள்வது நல்லது.

3.வாரம் ஒரு முறை இன்வெர்ட்டரை ஈரம் இல்லாத துணியை வைத்து துடைப்து நல்லது,

4. இன்வெர்ட்டர் ஓடி கொண்டு இருக்கும் போது அதிகமான சத்தங்கள் அல்லது அலாரம் வந்தால் அதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது நல்லது.

5. இன்வெர்ட்டரின் சிவப்பு நிற விளக்கு தொடர்ந்து எரிந்தால் எங்களை தொடர்பு கொள்வது நல்லது, இது தயாரிப்பாளரை பொறுத்து மாறுபடும்.

6. இன்வெர்ட்டர் மீது தண்ணீரோ, அல்லது மற்ற தூசிகள் படாமல் பாதுகாப்பது நல்லது, மேலும் நல்ல காற்றோட்டமும் அவசியம்.

7.மாதம் ஒரு முறை இன்வெர்ட்டரின் பின் பக்கத்தில் ஏதாவது பூச்சிகள் கூடு கட்டி இருக்கிறதா என்பதை பார்த்து சுத்தம் செய்வது நல்லது,

8. இன்வெர்ட்டரின் Breaker, அல்லது switch off நிலையில் உள்ளதா ? இன்வெர்ட்டர் வேலை செய்கிறதா என்பதை பார்த்து கொள்வதும் நல்லது

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளலாம்..

Sudhahar A – Solar Power Consultant 9677132146

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *