போர்க்குற்றம் குறித்து கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக வெளிவந்த புதிய அறிக்கை!

போர்க்குற்றம் குறித்து கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக வெளிவந்த புதிய அறிக்கை!

இலங்கையில் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற போது நிகழ்ந்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, முக்கிய பங்கு வகித்ததற்கான பெருமளவு ஆதாரங்கள் வெளிவந்துள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணிகள் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இக்கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இலங்கை அதன் வன்முறைகள் நிறைந்த கடந்தகாலப் பிரச்சினைகள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பாக அக்கறையுடன் இருப்பின், போர்க்குற்றங்களிலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு இருந்த முக்கிய பங்கு தொடர்பாக அவரைப் பொறுப்பேற்க வைக்கவேண்டும்” என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்ட அமைப்பின் (ITJP) நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கூறியுள்ளார்.

image 22 Thavvam
Image credits: Audioboom.com

கோத்தாபய ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகள்

2009 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலராகப் பதவிவகித்த போது, போர்க் களத்திலிருந்த தளபதிகளுக்கு கட்டளைகளை வழங்கியதற்கான முக்கிய ஆதாரங்களை இப்புதிய அறிக்கை கொண்டிருக்கிறது.

பாதுகாப்புப்படையினருக்கு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் ராஜபக்ச இராணுவத்தளபதியாக இல்லாதபோதும்கூட, பாதுகாப்புப் படையினருக்கு கட்டளையிட்டதுடன், அவர்கள் மீது தீர்க்கமான கட்டுப்பாட்டினையும் கொண்டிருந்தார்.

சர்வதேச மனிதாபிமானச் சட்டமும், சர்வதேச குற்றவியல் சட்டமும், மீறப்பட்டுக்கொண்டிருந்ததை அவர் அப்போதே நன்கு அறிந்திருந்தார், மேலும் அவற்றையெல்லாம் தடுப்பதற்கு எவ்விதமான நடவடிக்கையும் அவர் எடுக்கத் தவறியதுடன், தனக்குக் கீழே செயல்பட்டவர்களைப் பொறுப்பேற்க வைக்கவும் முயலவில்லை என்பதை இவ்வறிக்கை காட்டுகின்றது.

image 26 Thavvam
Credits: tamilguardian

போர் முடிந்தபின்னர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளைத் தொடங்குவதற்கும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அவருக்கும், தொடர்ந்துவந்த இலங்கை அரசாங்கங்களுக்கும் எவ்வளவோ வாய்ப்புகள் இருந்த போதிலும்நடந்த உண்மைகளை வெளிக் கொண்டுவருவதற்குப் பதில், ராஜபக்சவும் அவருக்குப் பின்வந்த ஜனாதிபதிகளும் பாதுகாப்புப் படையினரின் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்ததோடு, குற்றம் சாட்டப்பட்டவர்களையும் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றார்கள்.” என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போர்த்தடை வலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ராஜபக்ச கொண்டிருந்த பங்கினையும், விசாரணைகளற்ற படுகொலைகள், வேண்டுமென்றே காணாமல் ஆக்கப்படுதல்கள், சித்திரவதை, பாலியல் வன்முறை, பாலியல் வன்புணர்ச்சி, வலுக்கட்டாயமாக தடுத்துவைத்தல், பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதைத் தடுத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு அவர் தவறியது தொடர்பான ஆதாரங்களை 96 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை (இவ்வறிக்கையின் தமிழ்வடிவம் 100 பக்கங்களைக் கொண்டுள்ளது) ஆய்வு செய்கின்றது.

1989 நிகழ்வுகள்:

இலங்கையில் 1980களின் இறுதியில் முன்னைய வன்முறைக் காலப்பகுதியில், திரளான மக்கள் காணாமல் செய்யப்பட்டதில் கோட்டாபய ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆய்வு செய்து 2022 இல் ITJP’யால் வெளியிடப்பட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக இவ்வறிக்கை வெளிவருகின்றது.

image 23 Thavvam

1989 இல் மாத்தளை மாவட்டத்தில் இளம் இராணுவ அதிகாரியாக இருந்த ராஜபக்ச, அங்கே 700 இற்கும் மேற்பட்ட மக்கள் (பெரும்பாலும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தோர்) அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் காணாமல்போனதற்கு காரணமாக இருந்தார்.

அக்காலத்தில் பணியிலிருந்த அவர் மற்றும் அவருடைய படை உதவியாளர்களும், பதவி உயர்வுகள் பெற்று, 2009 போரின்போது முக்கிய பதவிகளில் இருந்தார்கள்.

இவர்களில் ஒருவர், அமெரிக்க அரசாங்கத்தால் பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்று பிரகடனப்படுத்தப்பட்ட போதும் கூட, தற்போது அவர் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாகப் பதவி வகித்துக்கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா சபையின் கடிதம்

ITJP’யால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையையடுத்து, ஐ.நா. சபையின் வல்லுனர்கள், 1980களின் பிற்பகுதியில் நடந்த வன்முறைகளில் ராஜபக்சவின் பங்கு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று கேட்டு 2022ஆம் ஆண்டில் தற்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினர். இன்றுவரை அதற்கான எந்தப் பதிலும் வழங்கப் படவில்லை.

தமிழ், சிங்கள மக்களுக்கும் எதிராக வன்முறைகடந்த காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்காக உண்மையைக் கண்டறியும் குழு ஒன்றினை ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்த நிலையிலும் அதுபற்றி மீண்டும் எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.

“தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களில் மிகவும் முக்கியமானவராக கோத்தாபய ராஜபக்சவே இருக்கமுடியும்.1989 தொடங்கி 2009 கடந்து இன்று வரைக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களிக்கும் போக்கு காணப்படுகின்றது.

பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டபோதிலும், அவற்றின் அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படாமலும், பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமலும் உள்ளது பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களுக்கு ஏமாற்றத்தையும் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளைப் பொறுப்பேற்கவைக்காமல், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்று பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குத் தேவைப்படும் உத்தரவாதத்தினை வெறுமனே ஆணைக்குழுக்களின் விசாரணைகளாலும் அறிக்கைகளாலும் பெற்றுவிட முடியாது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

முயற்சிகள்

2019ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வைத்து, சித்திரவதையில் ஈடுபட்டார் என்று கோத்தாபயவுக்கு எதிராக, சித்திரவதையால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு குடியியல் வழக்கொன்றினைப் பதிவுசெய்வதற்காக ITJP உதவி செய்தது.

ஆனால், அந்த ஆண்டு ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அரசுத்தலைவர் என்ற முறையில் அதிலிருந்து விலக்கு பெற்றிருந்தார்.

சிங்கள பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் கொலையில் தொடர்புடைய நபர் என்று குற்றம் சாட்டி இன்னொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

2022இல், பொருளாதார முகாமைத்துவச் சீர்கேடு தொடர்பாக கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

image 25 Thavvam

குற்றவியல் முறைப்பாடு அப்போது அவர் சிங்கப்பூருக்குத் தப்பியோடினார், அங்கே அவருக்கெதிராக போர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளில் அவரது பங்கினை சுட்டிக் காட்டி குற்றவியல் முறைப்பாடு ஒன்றினை ITJP சமர்ப்பித்தது, ஆனால் அவர் விரைவிலேயே இலங்கைக்குத் திரும்பினார். அங்கே ஜனாதிபதி மாற்றம் ஏற்பட்ட போதிலும், தொடர்ந்து அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

இவைகள் இப்படியிருந்தும் கனடாவானது கோத்தாபய ராஜபக்சவையும் அவரது சகோதரரையும் தடைசெய்ததன் மூலம் வழிகாட்டியாக அமைந்தள்ளது.

இலங்கையை பொறுப்பேற்கவைத்தல் தொடர்பாக ஐ.நா.வின் செயல் திட்டம் ஒன்றினை தொடங்குவதற்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வாக்களித்த நாடுகள் உட்பட மற்ற நாடுகள் இவ்விடத்தில் தயக்கம் காட்டிவருகின்றன.

பொருளாதாரப் பிரச்சினைகளின் நெருக்கடி நிலையில், இவ்வாறு பெரிய அளவிலான மனித அநீதிகளுக்குப் பாதுகாப்புப் படையினரைப் பொறுப்பேற்க வைப்பது தங்களால் இயலாத காரியம் என்று தற்போதைய அரசாங்கம் வாதிடுகின்றது. இதே வாதங்கள் தான் கடந்த காலங்களிலும் முன்வைக்கப்பட்டிருப்பதுடன், விளைவாக தண்டனையிலிருந்து விலக்களிக்கும் போக்கினைத்தான் யதார்த்தத்தில் ஏற்படுத்துகிறது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus

Editor Thavvam Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழால் இணைவோம்

Follow us on social media