itel Color Pro 5G 6.6″ 90Hz டிஸ்ப்ளே, நிறம் மாறும் பின்புறத்துடன் இந்தியாவில் ரூ. 9999க்கு அறிமுகம்

itel Color Pro 5G 6.6″ 90Hz டிஸ்ப்ளே, நிறம் மாறும் பின்புறத்துடன் இந்தியாவில் ரூ. 9999க்கு அறிமுகம்

ஏற்கனவே வெளியாகியிருந்த டீஸர்களுக்குப் பிறகு ஐடெல் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான ஐடெல் கலர் ப்ரோ 5ஜி(itel Color Pro 5G)யை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

image 10 edited Thavvam

இந்த ஐடெல் கலர் ப்ரோ 5ஜி ஆனது 6.6 இன்ச் எச்டி+ 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 6080 ஆக்டா கோர் ப்ராசசர் (MediaTek Dimensity 6080 Octa-Core processor) மூலம் இயக்கப்படுகிறது.

இது 6ஜிபி ரேம், கூடுதலாக 6ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன்( storage) வருகிறது, மைக்ரோ எஸ்டி வழியாக மேலும் விரிவாக்கக்கூடியது.

இந்த ஸ்மார்ட்போனில் 50MP AI இரட்டை பின்புற கேமரா மற்றும் செல்ஃபிக்களுக்கான 8MP முன்புற கேமரா ஆகியவை அடங்கும்.

Color Pro 5G இன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் பின்புற வடிவமைப்பு ஆகும், இது சூரிய ஒளியில் வெளிப்படும் போது பின்பக்க பேனலின் நிறத்தை மாற்ற IVCO (itel Vivid Colour) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

இந்த அலைபேசி NRCA (5G++) ஆதரிக்கிறது, தொலைதூர பகுதிகளில் கூட வலுவான 5G இணைப்பை உறுதி செய்கிறது. itel இன் கருத்துப்படி, NRCA ஆனது வேகமான உலாவல்(browsing) மற்றும் தடையில்லா இணைப்புக்கு நிலையான 5G இணைப்பைப் பராமரிக்கிறது, மேலும் ஃபோன் 10 5G பேண்டுகளை ஆதரிக்கிறது.

image 9 Thavvam

ஐடெல் கலர் ப்ரோ 5ஜி 5000mAh மின்கலத்துடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 18வாட் வேகமான சார்ஜிங்கை (fast charging) ஆதரிக்கிறது. கூடுதல் அம்சங்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட(side mounted) கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், எஃப்எம் ரேடியோ ஆகியவை அடங்கும், மேலும் இது ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது.

விவரக்குறிப்புகள்:

itel Color Pro 5Gபின்புறத்தில் IVCO (itel Vivid Colour) தொழில்நுட்பம், 6.6″ HD+, 90Hz புதுப்பிப்பு வீதம், மீடியாடெக் டைமன்சிட்டி 6080 ஆக்டா கோர், 6ஜிபி+6ஜிபி ரேம் + 128ஜிபி ரோம், 5000mAh பேட்டரி; 18W வேகமான சார்ஜிங்; பக்கவாட்டில் பொருத்தப்பட்ட (side mounted) கைரேகை சென்சார்; முக அடையாளம்(face ID) , 50 எம்பி AI இரட்டை கேமரா; 8MP முன் கேமரா, மேலும் இந்த அலைபேசி 10 5G பேண்டுகளை ஆதரிக்கிறது. லாவெண்டர் பேண்டஸி மற்றும் ரிவர் ப்ளூ நிறங்கள் (Lavender Fantasy and River Blue), 1 முறை இலவச திரை மாற்று சலுகை (1 time free screen replacement) விலை மற்றும் கிடைக்கும் தன்மை(price &availability), ஐடெல் கலர் ப்ரோ 5ஜி சாதனத்தின் விலை ரூ. 9,999 ஆகும். மற்றும் இது Amazon.in இல், Lavender Fantasy மற்றும் River Blue வண்ணங்களில் வாங்குவதற்கு கிடைக்கும். வெளியீட்டு சலுகையின் ஒரு பகுதியாக, ஐடெல் ரூ. 3,000 மதிப்புள்ள இலவச டஃபிள் டிராலி பேக்கை வழங்குகிறது. மற்றும் ஒரு முறை திரை மாற்று செய்யும் பட்சத்தில் அதன் மதிப்பு ரூ. 2,000 மிச்சமாகும்.

அறிமுகம் குறித்து ஐடெல் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அரிஜீத் தலபத்ரா பேசுகையில்,

பட்ஜெட்டுக்கு ஏற்ற 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்களை விரும்பும் இளம் பயனர்களுக்கு itel சிறந்த தேர்வாக இருப்பதால்(CMR அறிக்கை, ஏப்ரல் 2024), itel ColorPro 5G ஆனது 10K பிரிவில் தொழில்நுட்பத்தை மறுவரையறை செய்து 5G++ இணைப்பு மற்றும் வண்ணத்தை மாற்றும் பேனலை வழங்குகிறது.

ஸ்விஃப்ட் இணைப்பு (swift connectivity ) மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றின் சினெர்ஜி மற்றும். நெக்ஸ்ட்-ஜென் IVCO (itel Vivid Colour) தொழில்நுட்பமானது, பயனர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் இணைந்திருப்பதையும் ஸ்டைலாக இருப்பதையும் உறுதிசெய்து, அவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைகிறது. இந்தியாவின் 5G கிடைப்பது கணிசமாக அதிகரித்துள்ளது, Q1 இல் 28.1% இலிருந்து Q4 2023 இல் 52.0% ஆக மேம்பட்டது, ஒரு வருடத்திற்குள் 23.9 சதவீத புள்ளி உயர்வு. இந்த வாய்ப்பை உணர்ந்து, இந்தியா முழுவதும் உயர்தர 5G ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் வழங்க உறுதிபூண்டுள்ளோம். என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Editor Thavvam Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழால் இணைவோம்

Follow us on social media