பாகிஸ்தான் நாட்டின் கடற்படையினருக்கு தங்களுடைய முதல் உளவுக் கப்பலை உருவாக்குவதற்கு சீனாவானது அதிகளவிலான உதவிகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன.
பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற பெயருடைய 87 மீட்டர் நீளம் கொண்ட அந்தக் கப்பல், ஏவுகணைகள் ஏவப்படுவதனை கண்காணிப்பதற்காக வேண்டியும், உளவுத் துறையின் சேகரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்குடனும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எதிர்ப்பு
நவீன வசதிகளை கொண்ட இது போன்ற கப்பல்கள் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரான்சு ஆகிய ஒரு சில நாடுகளிடம் மட்டுமே கொண்டுள்ளன. பாகிஸ்தானுக்கு அதுபோன்ற கப்பலை தற்போது சீனா வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சீனா தன் உளவுக் கப்பலை இலங்கையில் நிலை நிறுத்திய நிலையில் இந்தியா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கப்பல் சுற்றி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கும் இவ்வாறான கப்பலை வழங்கி சீனா உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ராஜதந்திர ரீதியில் இந்தியாவிற்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply