வட கொரியா -வை ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தென் கொரியாவை அழித்து நிர்மூலமாக்கிவிடுவோம் என்று கிம் ஜாங் உன் மிரட்டல் விடுத்துள்ளார்.
வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், தொடர்ந்து அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, ஆயுத பலத்தையும் அதிகரித்து சில நாடுகளை அச்சுறுத்தி வருகிறார்.
அதற்கான எதிர் நடவடிக்கையாக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த ராணுவ பயிற்சிகளை தீவிரப்படுத்தி வருவதால் கடந்த சில மாதங்களாகவே கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகின்றது.
வட கொரியா தலைவர் கிம் மிரட்டல்
அதேவேளையில், தென் கொரியா உடனான அனைத்துப் பொருளாதார ஒத்துழைப்புகளையும் முறித்துக்கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது.மேலும், சமீபத்தில் இராணுவ வீரர்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் உன், போருக்கு தயார் நிலையில் இருக்கும்படி தெரிவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சென்று அங்கு பணிகளை பார்வையிட்டுள்ளார்.
தென் கொரியாவுடனான உறவு
அப்போது, தென் கொரியா உடனான தூதரக உறவை தொடரவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ எமக்கு விருப்பம் இல்லை. தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தென் கொரியாவை வட கொரியா அழித்து நிர்மூலமாக்கிவிடும்.சமீபத்திய நகர்வுகள்இராணுவம் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த அனுமதிப்பதாகவும், எப்போது தூண்டப்பட்டாலும் தென் கொரியாவை தாக்கி அழிக்க சட்டப்பூர்வமான அனுமதியை பெறுவதாகவும் வட கொரியஅதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus
Leave a Reply