ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் குழந்தைகளை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்திய வழக்கில் சிக்கிய நபருக்கு, அந்நாட்டு அதிபர் கடலின் நோவாக் பொது மன்னிப்பு வழங்கிய விடயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவர் தன்னுடைய பதவியிலிருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்ற வெள்ளிக்கிழமையன்று (09/02/24) அதிபர் மாளிகைக்கு வெளியே ஹங்கேரி மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் எதிர்க்கட்சிகளும் அதிபரை பதவி விலக அழுத்தம் கொடுத்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நாட்டின் முதல் பெண் அதிபராக பொறுப்புக்கு வந்த 46 வயதான கடலின் நோவாக் இந்த பொதுமன்னிப்பு விவகாரத்தில் தாம் தவறிழைத்து விட்டதாக குறிப்பிட்டு, பதவி விலகுவதாக அறிவித்துள்ளார், அத்தோடு தமது செயல் பாதிக்கப்பட்ட மக்களை காயப்படுத்தியிருக்கும் என்றும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுவர்கள் மற்றும் குடும்பங்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் தாம் எப்போதும் முன்நிற்பதை உறுதி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பொது மன்னிப்பு பெற்ற முன்னாள் துணை இயக்குநர் தன்னுடைய மேலதிகாரியின் சிறுவர்களை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்திய விவகாரத்தை மூடிமறைக்க உதவியதாக இருந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதமே குறித்த முன்னாள் துணை இயக்குநருக்கு அதிபர் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தும், இந்த விவகாரம் கடந்த வாரம் தான் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்தே இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus
Leave a Reply