கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து வரும் ரஷ்யா உக்ரைன் போர் தற்போது மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.
உக்ரைனின் எல்லைப் பகுதிகளுள் ரஷ்ய இராணுவத்தினர் ஊடுருவியபடி தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது உக்ரைனின் டோனெட்ஸ்க் நகரைக் குறிவைத்து ரஷ்ய இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தாக்குதல்
அதோடு பீரங்கிகள், கவச வாகனங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைனிய பகுதிகளுக்குள் ஊடுருவியுள்ளனர்.
இராணுவ முக்கியத்துவம்
இதனால் தற்போது இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒர்லிவ்கா என்ற கிராமத்தை உக்ரைனிய ராணுவம் ரஷ்யாவிடம் பறிகொடுத்துள்ளது.
இத்தாக்குதலில் 215 வீரர்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று கவச வாகனங்களையும் உக்ரைன் இழந்து உள்ளதாகவும், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே கடந்த வாரத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலினால் ஒரே நாளில் 234 உக்ரைனிய வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்