பல்வேறு நாடுகளில் அரசும் அரசியல்வாதிகளும், மக்களும் புலம்பெயர்ந்தோர்க்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பிரான்ஸ் அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள புலம்பெயர்தல் சட்டத்தில் ஜனாதிபதி கையெழுத்து இட வேண்டாம் என்று வலியுறுத்தி பிரான்ஸ் முழுவதும் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். இது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. 21 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 75,000 பேர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய புலம்பெயர் சட்டம் வலதுசாரி கொள்கைகள் போல் உள்ளதால் அது பிரான்சின் கொள்கைகளுக்கு துரோகம் செய்யும் எனக் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த புதிய புலம்பெயர்தல் சட்டம் வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதை எளிதாக்கும், வெளிநாட்டவர்கள் அரசு உதவி பெறுவதையும் பிரான்சு வாழ் வெளிநாட்டவர் தங்கள் குடும்பத்தினரை அங்கே வரவழைப்பதை கடினமாக்கும்.
இவைகளுக்கு நடுவே இந்த சட்டத்துக்கு ஆதரவளித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்கரானே சட்டத்தின் சில பிரிவுகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாக தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்
——————————————————————————–
Leave a Reply