பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவை.
தற்போது தமிழ்நாட்டின் மேலும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற தொடங்கிவிட்டன.
இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் வழிகாட்டுதல் படி இலங்கையில் திரிகோணமலை மாவட்டம் சம்பூரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் முயற்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில் சுமார் 200 காளைகளும் சுமார் 50 வீரர்களும் பங்கு பெற்றனர்.
இலங்கையில் சுமார் 40 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கண்டு களித்தனர்.
Leave a Reply