பிரித்தானியாவில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்று மற்றும் மழையுடன் லண்டனை இஷா புயல் தாக்கியுள்ளது. புயலால் ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்றால் விமானங்கள் தரையிறங்க இயலாமல் திருப்பி விடப்பட்டுள்ளது. லண்டனில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை மதியம் வரையில் ரயில் சேவைகள் முடங்கலாம் என்றும், பல நிறுவனங்கள் தங்கள் சேவை ரத்து செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.