சமூக வலைதளங்களில் பகிரப்படும் பரபரப்பு காணொளி லண்டனில் மீண்டும் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 12ம் தேதி வடக்கு வூல்விச் (North Woolwich) பகுதியில் ஒரு ஹைபிரிட் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதன் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டது.
தொடர்ந்து விம்பிள்டன் (Wimbledon) பகுதியில் ஒப்டேர் மெட்ரோடெக்கர் (Optare Metrodecker) பேருந்து ஒன்றின் பின்புறம் பெரிய வெடிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று புட்நே (Putney) பகுதியில் உள்ள செல்வெர்டன் (Chelverton) சாலையில் உள்ள பழுதுபார்க்கும் பணிமனையில் (garage) மேலும் ஒரு பேருந்து தீப்பற்றி எரிந்தது.
image: Facebook
அப்போது பணிமனை ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது, தற்போது இந்த காணொளியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவ்விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த காணொளி https://x.com/ediz1975/status/1750116346606633023?s=20
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான website ,Software சிறந்த முறையில் உருவாக்கிட தொடர்பு கொள்ளுங்கள் contactus