நம்ம அலைபேசி செட்டிங்ஸ்ல App Management-> Permission Manager-> Microphone அப்படின்னு ஒரு ஆப்ஷன் இருக்கு. இதுக்குள்ள என்னென்ன ஆப்களுக்கு Allowed all the time இருக்கோ அதெல்லாம் எப்பவுமே நாம பேசுறதெல்லாம் ஒட்டுகேட்டுட்டு இருக்கும்.
“ஹே! கூகுள்” அப்படின்னு சொன்னா எப்படி ஆன் ஆகுதோ அது போல என்னேரமும் நம்மள வாட்ச் பண்ணும். நாம பேசுறதெல்லாம் ஆங்கிலத்துல மொழிபெயர்த்து அதுல உள்ள சில முக்கிய வார்த்தைகளை மெம்மரியில் சேகரித்து வெச்சுக்கும். அந்த ஆப்களில் யாராச்சும் விளம்பரம் செய்யுறப்போ அந்த விளம்பரதாரர் கொடுக்கும் கீவோர்டுகளும் நம்மிடம் சேகரித்த கீவோர்டுகளும் ஒன்றா இருந்தா அந்த விளம்பரம் அந்த ஆப்களில் காண்பிக்கப்படும்.செருப்பு ஒன்னு வாங்கனும்னு பேசிட்டு ஃபேஸ்புக் ஓப்பன் பண்ணினா அந்த விளம்பரம் வரும். இது தான் காரணம்.
சில நேரம் Random அப்படின்னு சொல்லப்படுற சம்பந்தமே இல்லாத விளம்பரங்கள் அந்த ஆப்களில் காட்டிக்கொண்டிருக்கும். நாம் மனதில் நினைத்த விஷயங்கள் இந்த random விளம்பரத்துடன் சில சமயம் ஒத்துப்போக வாய்புள்ளது.
நேத்து எங்க வீட்டுத்தொலைவுல ஒரு கடையில் நண்பரோட நின்னுட்டு பேசிட்டு இருந்தேன். எங்க வீட்டுக்கிட்ட ஒரு பெரியாண்டிச்சி கோவில் இருக்கு அது போல அம்மாபேட்டை ஏரிகிட்டயும் ஒன்னு இருக்குன்னு சொல்லிட்டு இருந்தேன். எங்கள நோக்கி ஒரு 407 வண்டி வந்து நின்னது. அந்த வண்டியில பெரியாண்டிச்சி அம்மன் துணை அப்படின்னு போட்ருந்தது. நாங்க ஷாக் ஆகினோம். சில Randoms சில நேரம் ஒத்துப்போகும்.
நன்றி : Kamalakannan PM முகநூல் பதிவு
…
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus