நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னம்!

இந்திய தேர்தல் ஆணையம் வரப்போகும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

Seeman

மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவானது வரும் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் விவசாயி சின்னம் தொடர்பான சிக்கலில் சிக்கியிருந்தது.

கரும்பு விவசாயி சின்னம்

இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம்தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு, கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா என்ற கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து பெற்றுக் கொண்ட காரணத்தால் நாம் தமிழர் கட்சி பயன்படுத்திய சின்னத்தை இழக்க நேரிட்டது.

இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மாற்றாக வேறொரு சின்னத்தை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தியது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருந்த போதும் நாம் தமிழர் கட்சி வேறு சின்னத்தை கேட்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Editor Thavvam

Related Posts

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 1 டிஎம்சி உத்தரவை அடுத்து தமிழகத்திற்கு 8,000 கனஅடி மட்டுமே திறக்கப்படும் என கர்நாடகா தெரிவித்துள்ளது

.மழை நிலைமை சீரடைந்தால், கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடகா தயாராக உள்ளது என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு தினமும் 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று…

தமிழக வெற்றிக் கழகம் ஏற்றிய கொடி அகற்றம்: முதல் வழக்கு

நடிகர் விஜய் அண்மையில் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் அமைப்பின் கட்சிக் கொடியை அனுமதி பெறாமல் ஏற்றியதாக அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் த.வெ.க நடிகர் விஜய் தனது ரசிகர்கள் அமைப்பாக இருந்த மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார் (ladakh)

லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார் (ladakh)

HONOR Magic V3, HONOR MagicPad 2 மற்றும் HONOR MagicBook Art 14 ஆகியவை செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் IFA 2024 இல் உலக அளவில் விற்பனைக்கு வரும்

HONOR Magic V3, HONOR MagicPad 2 மற்றும் HONOR MagicBook Art 14 ஆகியவை செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் IFA 2024 இல் உலக அளவில் விற்பனைக்கு வரும்

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்ற உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்க்கி

பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்ற உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்க்கி

‘இது போருக்கான நேரம் இல்லை’: உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, போலந்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து

‘இது போருக்கான நேரம் இல்லை’: உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, போலந்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து

‘இது 1,000 தங்கப்பதக்கங்களை விட மேலானது’: சிறப்பான வரவேற்பால் நெகிழ்ந்த வினேஷ் போகத்

‘இது 1,000 தங்கப்பதக்கங்களை விட மேலானது’: சிறப்பான வரவேற்பால் நெகிழ்ந்த வினேஷ் போகத்