கிரேக்க நாட்டிற்கான போலி விசா க்களை பயன்படுத்தி அதன் மூலம் ஐரோப்பாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற ஒரு வர்த்தகரின் குடும்பம் கடந்த வாரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.
அவ்விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரேக்க விசா
இந்தக் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் தரகர் ஒருவரிடம் ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் செலுத்தி அதற்கான போலி கிரேக்க விசாக்களை தயார் செய்து பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாத்தாண்டிய பிரதேசத்தில் வசித்து வரும் குடும்பமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்ஙனம் கைது செய்யப்பட்ட நபர்கள் 43 வயதுடைய தந்தை, 47 வயதுடைய தாய், 21 மற்றும் 16 வயதுடைய இரு மகன்கள் ஆகியோர் என்று தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்