ஷாருக்கானுக்கு அறிமுகம் தேவையில்லை! சென்ற மே 26 அன்று, அவர் தனது அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான IPL போட்டியைக் காண சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் (MA Chidambaram Stadium) நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் கலந்து கொண்டார்.
ஐபிஎல் 2024 இல் குறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், கொல்கத்தா அணி(KKR) 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸை(SRH) தோற்கடித்து வெற்றியாளராக உருவெடுத்தது.
அப்போட்டியைக்காண வந்திருந்த போது ஷாருக் தனது கையில் ஒரு மண்டை ஓடு வடிவம் கொண்ட கடிகாரத்தை அணிந்திருந்தார்.
ஒரு சிறிய தேடலுக்குப் பிறகு, ஷாருக் அணிந்திருந்த கடிகாரம் “ரிச்சர்ட் மில்லே RM 052 டூர்பில்லன் ஸ்கல் டைட்டானியம் 2012 கடிகாரம்” (Richard Mille RM 052 Tourbillon Skull Titanium 2012 watch) என்பதை அறிந்தோம். அதன் விலை 4 கோடி ஆகும். கருத்துப் பிரிவுகளில் (comment section) பல பயனர்கள் அந்த கடிகாரத்தால் ஈர்க்கப்பட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் இறுதிப்போட்டியில், ஷாருக்கின் மனைவி கௌரி கான்(Gauri Khan), மகள் சுஹானா கான்(Suhana Khan) மற்றும் மகன்கள் ஆர்யன் கான்(Aryan Khan) மற்றும் அப்ராம் கான்(AbRam Khan), அனன்யா பாண்டே(Ananya Panday), ஷனாயா கபூர்(Shanaya Kapoor), மஹீப் கபூர்(Maheep Kapoor), சங்கி பாண்டே ( Chunky Panday) மற்றும் பாவனா பாண்டே(Bhavana Pandey) ஆகியோரும் உடன் இருந்தனர்.
ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் ஷாருக் ஒரு கொண்டாட்ட மனநிலையில் இருந்தார். மேலும் அவர் கௌதம் கம்பீரின் (Gautam Ghambhir) நெற்றியில் முத்தமிட்டார். ஷாருக் கடைசியாக ராஜ்குமார் ஹிரானியின் “டன்கி (Dunki)” படத்தில் நடித்தார். அவர் இன்னும் அடுத்த. புதிய படத்தை அறிவிக்கவில்லை, இருப்பினும், சுஜோய் கோஷ் இயக்கும் கிங் படத்தில் அவர் சுஹானாவுக்கு ஜோடியாக நடிப்பார் என்று வதந்திகள் உள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://www.instagram.com/p/C7crZGxSiRl/?igsh=eW5xMmhmMGx2MXY1
https://www.instagram.com/p/C7cOibhsQ2w/?igsh=b25sazBkY3hpNzM2
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்