தமிழகத்தில் கோவை திருச்சி சென்னை மதுரை ஆகிய இடங்களில்
கேலோ இந்தியா யூத் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று சென்னையில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் பெண்களுக்கான ட்ரெடிஷனல் பிரிவில் தமிழக வீராங்கனை நவ்யா 64.75 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான சபர் வாள் சண்டை பிரிவில் இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் அர்லின், 15க்கு 14 என்ற அளவில் ஹரியானாவின் லக்சயா பட்சரை வென்று தங்கம் பெற்றுத் தந்தார்.
தமிழகம் ஒடிசா அணிகள் மோதிய ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் தமிழக அணி 1-6 என்ற அளவில் தோல்வி அடைந்தது.
பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் தமிழகம் சத்தீஸ்கர் அணிகள் மோதியதில் தமிழக அணி 0-6 என்ற அளவில் தோல்வியுற்றது.
ஆண்களுக்கான கபடி அரை இறுதியில் ராஜஸ்தான் தமிழக அணிகள் மோதியதில் தமிழக ஆணி 23 41 என்ற அளவில் தோல்வியுற்றாலும் பெண்களுக்கான கபடி அரையிறுதியில் ஹிமாச்சலப் பிரதேசத்துடன் மோதிய தமிழக அணி 38- 31 என்ற அளவில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது