அணு உலை விபத்து காரணமாக சில தசாப்தங்களாக மனித நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ள செர்னோபில் விலக்கு மண்டலத்தில் (CEZ) வாழும் ஓநாய்கள் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மரபணுக்களை உருவாக்கியுள்ளன என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த புதிய ‘பரிணாம ரீதியான எதிர்ப்பு சக்தி’ பற்றி ஆய்வு செய்வது சில கொடிய நோய்க்கு எதிரான போராட்டத்தில் மனிதர்களுக்கு உதவும்.
உக்ரைனின் செர்னோபில் விலக்கு மண்டலத்தில் ஓநாய்களின் எண்ணிக்கை 1986 அணுசக்தி பேரழிவிற்குப் பிறகு வேகமாக வளர்ந்தது, இதனால் மனிதர்கள் அந்தப் பகுதியைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணுமின் நிலையம் வெடித்தபோது, அது புற்றுநோயை உண்டாக்கும் கதிர்வீச்சை சுற்றுச்சூழலில் வெளியிட்டு, அதனால் அப்பகுதியில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்ற வழிவகுத்தது. நியூயார்க் போஸ்ட் பத்திரிகையின் கூற்றுப்படி, புற்றுநோயை உண்டாக்கும் கதிர்வீச்சுக்களால் மேலும் பாதிப்பு வராமல் தடுக்க தடுக்க 1,000 சதுர மைல் மண்டலம் மனித நடமாட்டம் தடை செய்யப்பட்டது.
எவ்வாறாயினும், வெடிப்பு நிகழ்ந்த 38 ஆண்டுகளில் வனவிலங்குகள் அப்பகுதியிலுள்ள சூழலை தாங்கி வாழத்துவங்கியுள்ளன. கதிர்வீச்சுகளின் நீண்டகால வெளிப்பாட்டால் பாதிக்கப்படாத ஓநாய்களின் கூட்டமும் CEZ இல் சுற்றித் திரிகிறது.ஓநாய்கள் புற்றுநோயை எதிர்க்கும் திறன்களை வளர்த்துக்கொண்டதாகத் தெரிகிறது, அவை விஞ்ஞானிகளின் ஆர்வத்தை தூண்டும் தலைப்பாகவும், ஒரு தசாப்த கால ஆய்வின் பொருளாகவும் ஆக்கியுள்ளன.
பரிணாம உயிரியலாளரும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் நச்சுயியலாளருமான காரா லவ், 10 ஆண்டுகளாக செர்னோபில் ஓநாய்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். 2014 ஆம் ஆண்டில், லவ் மற்றும் அவரது சகாக்கள், ஓநாய்கள் உடலில் உருவாகியுள்ள கதிர்வீச்சுக்கான எதிர்ப்பு சக்தியை நன்கு புரிந்து கொள்ள ஓநாய்களிடமிருந்து இரத்த மாதிரிகளை சேகரித்தனர். சில விலங்குகளுக்கு ஜிபிஎஸ் கழுத்துப்பட்டைகளும் பொருத்தப்பட்டன.”அவைகள் எங்கே இருக்கின்றன மற்றும் எவ்வளவு கதிர்வீச்சுக்கு ஆளாகின்றன என்பதற்கான நிகழ்நேர அளவீடுகளை நாங்கள் பெறுகிறோம்,” என்று லவ் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.செர்னோபில் ஓநாய்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் 11.28 மில்லிரெம் அளவுக்கும் அதிகமான கதிர்வீச்சுக்கு ஆளாகின்றன என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர், இது சராசரி மனிதத் தொழிலாளியின் சட்டப்பூர்வ பாதுகாப்பு வரம்பை விட 6 மடங்கு அதிகமாகும்.
விலக்கு மண்டலத்திற்கு வெளியே உள்ள ஓநாய்களுடன் ஒப்பிடுகையில், செர்னோபிலில் உள்ள ஓநாய்கள் “கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் புற்றுநோய் நோயாளிகளைப் போலவே, மாற்றப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்புகளை” கொண்டிருப்பதை லவ் மற்றும் அவரது சகாக்கள் கண்டுபிடித்தனர்.
ஓநாய்களில் புற்றுநோய்க்கு எதிரான மரபணு மாற்றங்களைத் பிரித்து ஆராய்வதன் மூலம் மூலம், மனிதர்கள் புற்றுநோயைத் தக்கவைக்க உதவும் பிறழ்வுகளை நன்கு அடையாளம் காண முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus
Leave a Reply