புற்றுநோய் க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வில் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த அதிபர் புடின், புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமாட்யூலேட்டரி மருந்துகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் இறுதி கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும், என்று தெரிவித்துள்ளார்.
புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வில் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த அதிபர் புடின், புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமாட்யூலேட்டரி மருந்துகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் இறுதி கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும், என்று தெரிவித்துள்ளார்.
இவ்வளவு கால ஆராய்ச்சிகளும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இருந்தும் கூட இன்னும் பல நோய்களுக்கு சரியான தீர்வு எட்டப்படவில்லை என்பதே நிதர்சனம். ஆராய்ச்சியாளர்களின் தொடர் முயற்சிகளால் சில மருந்துகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இருப்பினும் கீமோதெரபி மட்டுமே முதன்மையாக குறிப்பிடத்தக்க சிகிச்சையாக உள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நேரடி சிகிச்சை தரும் பலனை விட இவை மக்களுக்கு அதிக பலனை கொடுக்கும், புற்றுநோய் பாதிப்பில் இருந்து இம்மருந்துகள் மக்களை காக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இம்மருந்தின் வகை, செயல்பாடு உள்ளிட்ட மேலதிக தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
இவ்வளவு கால ஆராய்ச்சிகளும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இருந்தும் கூட இன்னும் பல நோய்களுக்கு சரியான தீர்வு எட்டப்படவில்லை என்பதே நிதர்சனம். ஆராய்ச்சியாளர்களின் தொடர் முயற்சிகளால் சில மருந்துகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இருப்பினும் கீமோதெரபி மட்டுமே முதன்மையாக குறிப்பிடத்தக்க சிகிச்சையாக உள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus