சில மாதங்களுக்கு முன்பு கனடா நாட்டிற்கான விசா சேவைகளை இந்தியா இடைநிறுத்தி வைத்தமைக்கான காரணம் குறித்து முதன்முறையாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S. ஜெய்ஷங்கர் மௌனம் கலைத்துள்ளார்.
கனடா இந்தியா இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல்இந்திய வம்சாவளி கனடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதின் பின்புலத்தில் இந்தியா இருகின்றது என்று நம்புவதாக வெளிப்படையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார், கனடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.அதனைத் தொடர்ந்து இருதரப்பு தூதரக உறவுகளும் மிகவும் பாதிக்கப்பட்டன. இதற்கு எதிர் நடவடிக்கைகளுள் ஒன்றாக, சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் கனடாவிற்கான விசா சேவைகளை, நிறுத்தி வைத்தது இந்தியா.முதன்முறையாக மௌனம் கலைத்தார் இந்திய அமைச்சர்கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் 19ஆம் தேதி, லண்டன் நகரிலுள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
மேலும், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீதும் தீவைப்பு முயற்சி ஒன்று நடந்துள்ளது. செப்டம்பரில், கனடாவில் உள்ள இந்திய தூதர்களுக்கு சில மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.எனவே, ‘எங்கள் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கனடாவில் பாதுகாப்பாக பணிக்குச் சென்றுவிட்டு திரும்பும் ஒரு சூழல் இல்லாமலிருந்தது. எங்கள் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு உள்ளானார்கள். அவர்கள் பலவிதத்திலும் அவமதிக்கப்பட்டபோதும் கூட, கனடிய தரப்பிலிருந்து அவர்களுக்கு எவ்வித உதவியும் ஆதரவும் கிடைக்கவில்லை.
அதன் காரணமாகவேதான், கனடாவிற்கான விசா வழங்கும் சேவைகளை இடையில் நிறுத்த வேண்டியதாயிற்று’ என்று இந்திய வெளியுறவு அமைச்சர் S. ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில் அந்நேரத்தில், கனடாவில் பரவலாகவும், தெளிவாகவும் வன்முறை காணப்பட்ட சூழ்நிலையில், ஒரு அமைச்சராக, எம் தூதரக அதிகாரிகளை ஆபத்திற்கு உள்ளாக்க என்னால் அனுமதிக்கமுடியாது என்ற நிலைமை உருவானது. தற்போது அந்நிலை மாறிவிட்டது. இன்று எமது விசா சேவை வழக்கம்போல் செயல்பட்டுவருகிறது என்றார்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply