For Support

மன நலமும் உடல் நலமும்

இன்றைய அவசரகதியான வாழ்வினால் ஏற்படும் தீங்குகளை கண்டு நிறைய பேர் ஆரோக்கிய வாழ்விற்காக உடல் நலம் பேணத்தொடங்கிவிட்டனர்.

உடல்நலத்திற்கு தரப்படும் அதே அளவு அக்கறையும் பயிற்சியும் மனநலத்திற்கும் தர வலியுறுத்தி இந்த பதிவு அமைகிறது.

மனம்தான் மனித வாழ்வின் மூலம், மென்பொருளும் வன்பொருளும்( software & hardware) சேர்ந்து தான் கணிணியின் இயக்கத்தை தீர்மானிக்கும் அதுபோல மனமும் உடலும் விவரிக்க முடியாத உறவில் பிணைந்துள்ளன.

உடற்பயிற்சி, யோகா போன்றவை பற்றிய விழிப்புணர்வு இன்று மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் எல்லோரும் அந்த பயிற்சிகளில் ஈடுபடுகின்றனரா என்பது கேள்விக்குறியே.

இன்று மனநலத்தை நேரடியாக பாதிக்கும் சில நடைமுறை பழக்கங்களை காணலாம்.

 இன்றைய பேச்சு வழக்கில் டிப்ரஷன் (depression) என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகிவிட்டது.  ஒரு கணினியால் எப்படி தன்னுடைய திறனுக்கு மேல் தரவுகளை பரிசீலிக்க இயலாதோ அதுபோலதான் மனித மனமும் தன்னுடைய திறனுக்கு மேல் அளவுக்கு அதிகமான தரவுகளை இன்றைய நாளில் படிப்புக்காகவும் வேலைக்காகவும் குடும்ப சூழலுக்காகவும் பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

 மற்றொரு காரணியானது ஸ்கிரீன் டைம் (screen time) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்  கணினி மற்றும் அலைபேசி திரைகளை பயன்படுத்தும் நேரம் ஆகும்.  இது மனிதர்களை அடிமையாக்க தொடங்கி விட்டது காரணமே இல்லாமல் அலைபேசியை எடுத்து சமூக வலைத்தளங்களில் உழன்று கொண்டிருக்கும் பழக்கத்தை நாளுக்கு நாள் ஏற்படுத்திவிடுகிறது.

 இது போன்ற செயல்களால் நாம் மனதிற்கும் நம் எண்ணங்களுக்கும் எவ்வளவு இறுக்கத்தை ஏற்படுத்துகிறோமோ அதே அளவுக்கு இறுக்கத்தை தளர்த்தும் பயிற்சிகளிலும் நாம் ஈடுபடுவது அவசியமாகிறது. 

 தினமும் அரை மணி நேரத்தையாவது ஒதுக்கி அலைபேசி மற்றும் கணினிகளை அணைத்து வைத்துவிட்டு  மனதிற்கு ஓய்வு கொடுக்கும் விதமாக  விலங்குகளையோ பறவைகளையோ இயற்கை காட்சிகளையும் கடற்கரைகளையோ காணலாம்,  வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடலாம் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லது கெட்டதுகளை பேசி நேரத்தை செலவிடலாம்.  ஓவியங்கள் வரையலாம் எந்த காரணமும் இல்லாமல் தெருவில் ஒரு முறை நடந்து சென்று விட்டு வரலாம்.   இதுபோன்ற  எந்த செயலில் நம் மனம் ஈடுபட நாட்டம் கொள்கிறதோ அதில் ஈடுபட்டு மனதை அமைதி படுத்தலாம்.  கேட்பதற்கு ஏதோ சாதாரணமாக தோன்றும் இந்த பழக்கமானது நாம் தொடர்ந்து செய்யும்போது நம் நடைமுறை வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் மனம் ஓய்வடையும்போது சிந்தனைகள் தெளிவாகும். கோடரியை தீட்டுவதற்கு நேரம் செலவிட்டால், வெட்டுவது சுலபமாக இருக்கும். நலம் நாடுவோம்.

Share this

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

You May Also Like

Recommended for you